அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சங்கநதி நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார்!
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சங்கநதி நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார்!

ஈப்போ, மே 17-

பேரா மாநிலத்தில் புகழ்பெற்ற சங்கநதி என அழைக்கப்படும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் மீது அவருடன் பணியாற்றிய பெண்மணி பாலியல் புகாரை தெரிவித்திருக்கின்றார்.

தமக்கு பாலியல் தொல்லை வழங்கியதோடு மனரீதியில் பாதிப்படையும் வகையில் நடவடிக்கைகளை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுப்பதாகவும் அந்த பெண்மணி தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதிக் கட்சியின் உறுப்பினருமான அவர் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் சங்கநதி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வந்த அவருக்கு கடந்த பொது தேர்தலில் நாடாளுமன்ற தொகுதி வழங்கப்பட்டது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்றி வந்ததாகவும் அவ்வப்போது  வாட்ஸ் அப் சமூக தளங்களில் அம்மு சாயங், லவ் யூ என ஒவ்வொரு நாளும் அவர் குறுஞ்செய்தி அனுப்பி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்களுக்குத் திருமணமாகி விட்டது அதனால் நீங்கள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என தாம் பலமுறை அவரை கேட்டுக் கொண்ட பிறகும் அவர் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை என தமது போலீஸ் புகாரில் அந்த பெண்மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

நாளொன்றுக்கு 50 முறை தம்மை அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதால் அவருடைய எண்ணை முடக்கி விட்டதாகவும் அந்த பெண்மணி கூறியுள்ளார். இந்த பெண்மணியின் போலீஸ் புகார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன