அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஆலயத் திருவிழாவில் துப்பாக்கி வேட்டு பிரயோகம்:  நால்வர் கைது!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஆலயத் திருவிழாவில் துப்பாக்கி வேட்டு பிரயோகம்:  நால்வர் கைது!

ஷாஆலம் மே 18-

ஆலயத் திருவிழாவில் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டு கிளப்பிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.சுங்கை .பூரோங், பாரிட் 4இல் உள்ள ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் துப்பாக்கி வேட்டு கிளப்பியதன் தொடர்பில் 36 மற்றும் 72 வயதிற்குட்பட்ட நான்கு சந்தேகப் பேர்வழிகள் கோலசிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக கோலாசிலாங்கூர் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டன் முகமட் அஸ்ரி முகமட் வஹாப் தெரிவித்தார்.

சுடும் ஆயுதத்தின் உரிமையாளர் உட்பட அந்த நான்கு ஆடவர்களையும் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை போலீசார் பெற்றுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கியும் 17 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆலய திருவிழாவின் போது தனிப்பட்ட கும்பலைச் சேர்ந்த சிலர் இருபது முறை துப்பாக்கி வேட்டு கிளப்பும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 1960ஆம் ஆண்டின் ஆயுத சட்டத்தின் 39 வது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் அஸ்ரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த நான்கு நபர்களும் தாங்களாகவே சரணடைந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக முகமட் அஸ்ரி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன