அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > முதுகலை- முனைவர் பட்டத்திற்கு தமிழில் ஆய்வு எழுத தடையில்லை? உப்சி பல்கலைக்கழகம் விளக்கம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

முதுகலை- முனைவர் பட்டத்திற்கு தமிழில் ஆய்வு எழுத தடையில்லை? உப்சி பல்கலைக்கழகம் விளக்கம்

கோலாலம்பூர் மே 18-

தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை தமிழில் எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அந்த பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

2011ஆம் ஆண்டு முதல் தமிழ், சீனம் மற்றும் அரபு மொழிகளுக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி விதிமுறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உப்சி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

எனவே எம்.ஏ. மற்றும் பி எச்.டி பட்டப்படிப்புக்கான ஆய்வுகளை தமிழ் மொழியில் எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் உண்மையில்லை.

இந்தக் குற்றச்சாட்டை உப்சி பல்கலைக்கழகம் கடுமையாக கருதுகிறது. இந்த பொய்யான தகவலை பரப்பும் தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உப்சி பல்கலைக்கழகத்தின் தொடர்பு தொழில் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

உப்சி பல்கலைக்கழகத்திலும் ஏமாற்றம்! ஒரு முனைவரின் மனக்குமுறல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன