அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மரண சகாய நிதி நிறுத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது! – எம்.பி. ராஜா
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மரண சகாய நிதி நிறுத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது! – எம்.பி. ராஜா

ரவாங், மே 18-

சிலாங்கூர் மாநில அரசு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு வழங்கி வந்த மரண சகாய நிதி திடீரென நிறுத்தப்பட்டது வருத்தமளிப்பதாக மலேசிய இந்திய காங்கிரசின் சிலாங்கூர் மாநில தலைவர் எம்.பி.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். .இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையானது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு அவர்கள் வழங்கினார்கள். ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் அதிருப்தியை தேடிக்கொள்ளும் இச்சூழ்நிலையில் மரண சகாய நிதியையும் நிறுத்தியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி40 பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய மரண சகாய நிதி மிகப்பெரிய உறுதுணையாக இருந்து வந்தது. பி40 பிரிவின் கீழ் உள்ளவர்களின் வீட்டில் யாரேனும் உயிரிழந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்வதற்கு பணம் இல்லாமல் தவிக்கின்றார்கள். அதற்கு மாநில அரசு வழங்கிய இந்த மரண சகாய நிதி ஓரளவு உதவி புரிந்தது.

ஆனால் இந்த நிதியை மாநில அரசு நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருப்பது மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. உடனடியாக இந்த அறிவிப்பை மாநில அரசு மீட்டுக் கொள்ள வேண்டும் என ராஜா கேட்டுக்கொண்டார்.

முன்னதாக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு செலாயாங் தொகுதியின் ஆண்டு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அத்தொகுதியின் தலைவருமான ராஜா தெரிவித்தார். இந்த ஆண்டு கூட்டத்திற்கு மலேசிய இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் தலைமை ஏற்கிறார். இந்த ஆண்டு கூட்டம் இங்குள்ள எம்சிஏ மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் வி விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், மூன்று உதவி தலைவர்கள் உட்பட மத்திய செயலவை உறுப்பினர்களும் சிறப்பாக செயல்படுகின்றார்கள். டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அறிவுறுத்தலின் கீழ் கட்சி மிகப்பெரிய உருமாற்றத்தை கண்டு வருகின்றது. அதனால் நாம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் நாளும் வெகு தூரம் இல்லை என எம்பி ராஜா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன