சூப்பர் லீக்: கோலாலம்பூரை சாய்த்தது பி.ஜே சிட்டி!

பெட்டாலிங் ஜெயா மே.18-

சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பி.ஜே சிட்டி அணி 1 -0 என்ற கோல் கணக்கில் கோலாலம்பூர் குழுவை வீழ்த்தியது. முற்பகுதி ஆட்டம் கோல் எதுவுமின்றி முடிந்தபோதிலும் பிற்பகுதி ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை பி.ஜே .சிட்டி அணி கோலாலம்பூர் குழுவின் கோல் முனையை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.

இதன் பயனாக தனக்கு கிடைத்த வாய்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட ஷாபி ஷாலி பி.ஜே சிட்டி குழுவுக்கான வெற்றி கோலை அடித்தார்.

இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் குழுவினர் எப்படியாவது ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொள்ள வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பி.ஜே சிட்டி குழுவினர் தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்தியதோடு தொடர்ச்சியாக கோலாலம்பூர் குழுவுக்கு எதிராக சுறுசுறுப்பான தாக்குதலையும் நடத்தினர்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் பி.ஜே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் வழி பி.ஜே . சிட்டி அணி 17 புள்ளிகளுடன் தற்போது லீக் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

இதனிடையே இந்த ஆட்டத்தின் முடிவு குறித்து பி.ஜே சிட்டி குழுவின் பயிற்சியாளரான தேவன் மனநிறைவைத் தெரிவித்தார் .தமது ஆட்டக்காரர்கள் இந்த வெற்றிக்காக முழு முயற்சியையும் ஒன்று திரட்டி கடுமையாக போராடியதாகவும் அவர் கூறினார். . சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய பி.ஜே சிட்டி குழுவின் அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் அவர் தமது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

 

சூப்பர் லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 36 புள்ளிகளுடன்JDT  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 25 புள்ளிகளுடன் பகாங் இரண்டாவது இடத்திலும் 21 புள்ளிகளுடன் சிலாங்கூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் முறையே கெடா, மலாக்கா ,பேரா,மற்றும் பி.ஜே சிட்டிஆகியவை இடம்பெற்றுள்ளன.