ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > மே 18; முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மே 18; முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

கோலாலம்பூர், மே 18-

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் பலர் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவம் 10ஆம் ஆண்டு நினைவு தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது.

இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நீடித்து வந்த போர், கடந்த 2009 ஆண்டு, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளுடன் நிறைவடைந்தது.

மே 18-ஆம் நாளில் உலகமே கண் விழித்துப் பார்த்திருக்க, ஈழத் தமிழினத்தின் மீது மனிதகுலம் ஏற்க முடியாத கொடூரத்தைச் சிங்கள தேசம் ஏவி, அதன் உச்சத்தைத் தொட்ட இருண்ட நாள்.

பேரினவாதம் தலைக்கு மேல் போக,  சிங்கள அரசாங்கம்  தனது ஆயுத பலத்தை தமிழ்மக்கள் மீது மூர்க்கத்தனமாக மேற்கொண்டதால் மக்கள் கொலை செய்யப்பட்ட  காட்சியும் அவலமும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாது.

தாய் மண்ணுக்காக மடிந்த மக்களையும் மாவீரர்களையும் நினைத்து பார்க்கும் இந்த நாளே,  உலகம் முழுவதும்  உள்ள தமிழ் மக்கள் போர்க் குற்றவியல் நாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் கேப்டன் பிரபாகரன் படையின் மூலம் புதிய விடியல் வரும் என்று மக்கள் நம்பியிருந்த காலம். ஆனால், பிரபாகரன் இன்னும் சாகவில்லை . உயிரோடுதான் இருக்கிறார் என்று கூறப்படுவதை உலகத் தமிழர்கள் இன்றும் அதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

முள்ளி வாய்க்கால் சம்பவத்தை உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்கள் நெஞ்சில் சோகத்தை சுமந்து கண்ணீர் மல்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவ அரக்கர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு உலக மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மலேசியாவிலும், ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களை மனிதநேயத்துடன் நடத்தும் மக்களும் இருக்கின்றனர். இன்னும் சில இடங்களில் அவர்கள் பணியாளர்களாக வஞ்சிக்கபடுவதும் உண்டு.

இம்மண்ணில் பிழைக்க வந்த அவர்களை சக உதிரமாக பார்க்க வேண்டாம், சக மனிதராக, தமிழர் உணர்வோடு நடந்துக்கொண்டாலே போதும், ஒரு தாய் மண்ணின் அணைப்புக்குச் சமமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன