கோலாலம்பூர், மே 19-

நாட்டில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார தரத்தை  உயர்த்துவதில் சிறந்த பங்கை ஆற்றியதற்காக சமூக ஆர்வலர் டான்ஸ்ரீ லீ லாம் தை  அவர்களுக்கு  மேலும் ஒரு உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் .

UNI-MLC எனப்படும் மலேசிய தொழிலாளர் மையம் -அனைத்துலக தொழிற்சங்க அமைப்பிடமிருந்து தேசிய தொழிலியல் மற்றும் சுகாதார பாதுகாப்பு கழகத்தின் தலைவருமான டான்ஸ்ரீ லீ லாம் தை இந்த விருதை பெற்றுக்கொண்டார். பெற்றார் . அண்மையில் தொழிலாளர் தினத்தன்று இந்த விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

UNI – MLCயின் தலைவர் டத்தோ முகமட் ஷாபி பி.பி மாமால் இந்த விருதை டான்ஸ்ரீ லீ லாம் தை அவர்களுக்கு வழங்கினார்.

மலேசியா தொழிலாளர் மையம் மற்றும் அனைத்துலக தொழிற்சங்க அமைப்பில் 170 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிப்பதோடு  நாடு முழுவதிலும்  550,000 தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.

UNI-MLCயின் ஆலோசகருமான லீ லாம் தை  தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த உயரிய விருதை பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை UNI-MLC மற்றும் பேங்க் இஸ்லாம் மலேசியாவின் நிர்வாகிகள் தொழிற்சங்கம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.