கோலாலம்பூர், மே 21-

ஷேடோபெக்ஸ் மலேசியா – மசல் ரைடர்ஸ் குழுவைச் சேர்ந்த 9 பேர் தலைநகர் கோலாலம்பூர் தொடங்கி தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் வரை தங்களது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.

இந்த பயணம் வெற்றி அடைவதற்கு உறுதுணையாக நின்ற சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் டத்தோ ஆனந்த் கூறினார்.

கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட இந்த பயணம் தாய்லாந்து, கம்போடியாவை கடந்து வியட்நாமை சென்றடையும், பின்னர் வியட்நாமில் இருந்து புறப்பட்டு கம்போடியா வழியாக தாய்லாந்து வந்து மீண்டும் தாயகம் திரும்புவோம் என டத்தோ ஆனந்த் கூறினார்.

உலகத்தில் தலை சிறந்த மோட்டார் சைக்கிள் ஆன ஹார்லி டேவிட்சன் மூலம் இந்த ஒன்பது பேரும் தங்களின் பயணத்தை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக அந்தந்த நாடுகளில் உள்ள ஹார்லி டேவிட்சன் பைக்குகளை பயன்படுத்துபவர்கள் இந்த பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்வதாகவும் அவர் கூறினார். இந்த பயணம் 16 நாட்கள் தொடரும்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஹார்லி டேவிட்சன் தலைமையகத்தில் இருந்து புறப்பட்ட இவர்களுக்கு இதர அலி டேவிட்சன் வீரர்கள் ஆதரவு தெரிவித்து ஒன்று கூடினார்கள். இவர்களின் பயணம் வெற்றி அடைய வேண்டுமென அவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.

வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி இந்த ஒன்பது பேரும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் மூலம் தங்களின் பயணத்தைத் தொடங்கினார்கள்.

9 பேர் கொண்ட இந்தப் பயணத்தில் 60 வயதான என்.ஆர். துரையும் கலந்து கொள்கிறார். டத்தோ ஆனந்த் தலைமையில் குமார், நெல்சன், மார்ட்டின், ராஜா, கோபிந்தன், விஜய், வேணு ஆகியோர் 5600 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்கின்றார்கள். இவர்களின் பயணம் வெற்றி அடைய அநேகன் இணையத்தள பதிவேடு வாழ்த்துகின்றது.