கூடைப்பந்தில் மலேசியாவிற்கு தங்கம்! கரிஸ்மா, சந்திரலேகா அதிரடி

Malaysia's Netball player celebrate thier winning with the gold medal with Prime Minister Datuk Seri Najib Tun Razak (centre) after wining the final match against Singapores's at Juara Stadium in Bukit Kiara, yesterday.

கோலாலம்பூர், ஆக. 20-

சீ விளையாட்டுப் போட்டியின் 2ஆம் நாளான நேற்று மலேசியா கூடைப்பந்து பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றது. சீ போட்டியின் நடப்பு வெற்றியாளரான சிங்கப்பூருக்கு எதிராக மலேசியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தங்கப்பதக்கம் வென்ற மலேசிய அணி

ஆட்டம் தொடங்கியது முதல் மலேசிய பெண்கள் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிங்கப்பூரை திக்குமுக்காட வைத்தது. அதோடு புள்ளிகளைப் பெறுவதில் மலேசிய அணி முனைப்பாக இருந்ததால், சிங்கப்பூர் தடுமாறிப் போனது.

குறிப்பாக இந்திய பெண்மணிகளான கரிஸ்மா, சந்தரலேகா ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கரிஸ்மா என கூச்சலிட்டனர். ‘ஒன்றாக எழுவோம். பங்கிட் பெர்சாமா என்று மலேசிய ரசிகர்கள் ஆட்டம் முடியும் வரை உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.

இனபாகுபாடின்றி அனைவரும் இணைந்திருப்பது மலேசியர்களின் அடையாளத்தைக் காட்டுவதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் தெரிவித்தார். 4 சுற்றுகள் முடிவில் மலேசியா 65-41 என்ற புள்ளிகளில் சிங்கப்பூரை வீழ்த்தி 29ஆவது சீ போட்டியின் கூடைப்பந்து பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றனர்.