ஈப்போ மே. 22
பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியை அருணகிரிநாதர் மன்றம் தத்தெடுத்தது
அருணகிரி நாதர் மன்றம் சமய அமைப்பாக இருந்தாலும் சமுக நல உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகப் பேறு டாக்டர் வ. ஜெயபாலன் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு சமயப் பணியை செய்து வருகிறது.
மேலும் இந்த அமைப்பு ஈப்போ தண்டாயுத பாணி ஆலயத்தில் மாதாந்திர சமய சொற்பொழிவை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் இந்த அமைப்பு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்கு உதவிகளை செய்து வருகிறது .அந்த வகையில் இந்த ஆண்டு பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் 5 மற்றும் 6 ஆம் வகுப்பைச் சேரந்த 35 மாணவர்களை தத்தெடுத்தது.
அந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அருணகிரி நாதர் மன்றத்தின் கல்விப் பிரிவின் பொறுப்பாளர் சாய் கிருஷ்ணன் தெரிவித்தார்
இன்று இரவு அருள் மிகு தண்டாயுத பாணி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற ”தேடலும் தெளிவும்”( சமய சொற்பொழிவு) நிகழ்வில் இந்த தத்தெடுப்பு நிகழ்வு நடைபெற்றது .

இதில் முக்கிய பேச்சளராக சி. பாண்டித்துரை கலந்துக்கொண்டார் . ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான எம் . குலசேகரன் பேராதரவோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் குலசேகரனின் துணைவியார் ஜெயலட்சுமி வருகை புரிந்தார் .


