புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > மலேசியாவின் பன்னீர்செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்துவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மற்றொரு முயற்சி
உலகம்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மலேசியாவின் பன்னீர்செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்துவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மற்றொரு முயற்சி

சிங்கப்பூர், மே 22-

வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படவிருக்கும் மலேசியாவின்  பன்னீர்செல்வம் பரந்தாமனின் மரண தண்டனையை நிறுத்தக்கோரும் வழக்கு மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை செவிமடுக்கும்.

சிறையிலிருந்தவாறு பன்னீர்செல்வம் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக லாயர்ஸ் போர் லிபர்டி எனப்படும் விடுதலைக்கான வழக்கறிஞர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் என். சுரேந்திரன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

மே 24ம் தேதி பன்னீர் செல்வத்திற்கான மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பிற்கும்  இறுதி கருணை மனுவையும் பன்னீர் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வூட்லண்ஸ் பரிசோதனை சாவடியில்  51.84 கிரேம் மோபின் போதைப்பொருளை கடத்தியதற்காக 32 வயதுடைய பன்னீர்செல்வம் குற்றவாளி என கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன