ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பட்ஜெட்  2020: மதுபானம், சிகரெட் ஏற்றுமதி வரிவிலக்கா?
சமூகம்முதன்மைச் செய்திகள்

பட்ஜெட்  2020: மதுபானம், சிகரெட் ஏற்றுமதி வரிவிலக்கா?

கோலாலம்பூர், மே 22-

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்சி அமைத்து ஒரு வருடம் கடந்து விட்ட வேளையில், வருகின்ற அக்டோபர் மாதம் தனது இரண்டாவது வரவுசெலவு திட்டத்தைத்  தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்க படுகின்றது.

ஏற்கனவே, விலைவாசி உயர்வு, பொருளாதரசீரின்மை போன்ற சிக்கல்களில் கவலையுற்றிருக்கும் மக்களை இந்த 2020 பட்ஜெட், நாட்டின் பொருளாதரத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில், 2020 வரவுசெலவு திட்டத்தில் மதுபானம், சிகரெட்  ஏற்றுமதி வரிவிலக்கு, அளிக்கப்படலாம் என்ற தகவல் அநேகன்  ஊடகத்திற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மக்கள் கூட்டணியின் முக்கிய பிரமுகர் ஒருவர், அநேகன்  ஊடகத்திற்கு தெரிவித்த தகவலின் மூலம், நிதிஅமைச்சு,  2020 பட்ஜெட் திட்டத்தில் மதுபானம், சிகரெட் ஏற்றுமதி வரிவிலக்கு அளிக்க ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

 மதுபானம், சிகரெட்   ஏற்றுமதி வரிவிலக்கு அளிப்பதன் மூலம் நாட்டுக்கு வருவாய் பெருகும் என சொல்லப்பட்டாலும், இந்த ஏற்றுமதி வரிவிலக்கு மிகவும் ஆபத்தான ஒன்று எனவும் அந்த பிரமுகர் கோடிகாட்டினார்.

மதுபானம், சிகரெட்   ஏற்றுமதி வரிவிலக்கு அளிப்பதன் மூலம்,  போலி மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனை அதிகமாகும் என வர தெரிவித்தார்.

மேலும், இந்த வரிவிலக்கினால் , மதுபானம், சிகரெட்  விலை குறையும் எனவும் இதனால், மதுபானம், சிகரெட் பயனீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

இது, நாட்டின் சுகதாரத்திற்கு கேடு விளைவிக்கும் செயல் என அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர் அழுத்தமாக தெரிவித்தார்.

அதுமற்றுமின்றி, மதுபானம், சிகரெட்  விலை குறைக்கப்பட்டால், இளம் வயதினர், மதுபானம் மற்றும்  சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது.

எனவே, அரசாங்கம் இதை கருத்தில் கொண்டு,  மதுபானம் மற்றும்  சிகரெட் ஏற்றுமதி வரிவிலக்கு  அளிக்கயிருக்க திட்டம் கொண்டிருந்தால், உடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன