வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ரியல் மாட்ரிட்டில் ஹசார்ட் & பொக்பாவை வரவேற்கிறேன் – வரேன் !
விளையாட்டு

ரியல் மாட்ரிட்டில் ஹசார்ட் & பொக்பாவை வரவேற்கிறேன் – வரேன் !

மாட்ரிட், மே.23-

ஸ்பெயின் ரியல்  மாட்ரிட்ல் கிளப்பிற்கு செல்சியின் எடின் ஹசார்ட்டையும், மென்செஸ்டர் யுனைடெட்டின் போல் பொக்பாவையும் தாம் வரவேற்பதாக அந்த கிளப்பின் தற்காப்பு ஆட்டக்காரர் ரஃபெல் வரேன் தெரிவித்துள்ளார். அந்த இரண்டு நட்சத்திர ஆட்டக்காரர்களையும் வாங்க ரியல் மாட்ரிட் முடிவெடுத்தால் , அது மிகச் சிறந்த முடிவாக இருக்கும் என வரேன் தெரிவித்தார்.

ரியல் மாட்ரிட் அணியில் தொடர்ந்து விளையாடி வரும் ரஃபெல் வரேன் அண்மையில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பொக்பா, ரியல் மாட்ரிட் கிளப்பில் இணைவது தொடர்பில் தாம் அவருடன் பேசியுள்ளதாக வரேன் தெரிவித்தார். எனினும் அதன் விவரங்களைத் தம்மால் தற்போது வெளியிட முடியாது என்றும் அவர் சொன்னார்.

புதிய ஆட்டக்காரர்களை வாங்குவதில் ரியல் மாட்ரிட் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஸ்பெயின் லா லீகா போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ரியல் மாட்ரிட்டுக்கு கடந்த பருவம் மிக மோசமான ஒரு பருவமாக அமைந்துள்ளது. இந்நிலையில் எடின் ஹசார்ட், போல் பொக்பா போன்ற ஆட்டக்காரர்களை வாங்குவதன் மூலம் மீண்டும் அந்த அணியை பலம் வாய்ந்த அணியாக உருவாக்க பயிற்றுனர் சினிடின் சிடான் திட்டமிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன