இ.பி.எல்: மென்செஸ்டர் யுனைடெட்டின் அதிரடியில் வீழ்ந்தது சுவான்சி

0
13

லண்டன், ஆக.20-
2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 4 -0 என்ற கோல்களில் சுவான்சி சிட்டியை வீழ்த்தி அதிரடிப் படைத்துள்ளது. இந்த வெற்றியுடன் மென்செஸ்டர் யுனைடெட் லீக் பட்டியலில் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் மென்செஸ்டர் அணியின் எரிக் பெய்லி முதல் கோலை பதிவு செய்தார்.   இதனால் முதல்பாதி நேரத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணி 1 என முன்னிலைப் பெற்றது.

2 ஆவது பாதி நேர ஆட்டதில் சுமார் 35 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. கடைசி 10 நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ரொமேலு லூக்காகு 80 ஆவது நிமிடத்திலும், போக்பா 82 ஆவது நிமிடத்திலும், அந்தோணி மார்சியல் 84 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் மென்செஸ்டர் அணி 4-0 என சுவான்சி அணியை வீழ்த்தியது. இந்த பருவத்தின் முதல் இரண்டு ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் 8 கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்துள்ளது.