திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > விபத்தில் பள்ளி மாணவன் பலி! 24 மாணவர்கள் காயம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

விபத்தில் பள்ளி மாணவன் பலி! 24 மாணவர்கள் காயம்

சிரம்பான் மே 24-

ஜெலுபுவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த தொழில் கல்லூரி மாணவன் ஒருவன் மாண்ட தோடு மேலும் 24 மாணவர்கள் காயமடைந்தனர்

புக்கிட் தங்காவுக்கு அருகே ஜாலான் கோலா கெளவாங் – சிரம்பான் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மாலை மணி 3 39 அளவில் இந்த விபத்து நிகழ்ந்தபோது 25 மாணவர்கள் பயணம் செய்த அந்த பஸ் கோலா கிளவாங்கிலிருந்து சிரம்பானை நோக்கி சென்றதாக நெகிரி செம்பிலான் போக்குவரத்து அமலாக்க குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் சூப்பிரடண்ட் இப்ராஹிம் முகமட் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன