முகப்பு > குற்றவியல் > அருண் துரைசாமிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் (SMMTD), கண்டனம்
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அருண் துரைசாமிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் (SMMTD), கண்டனம்

கோலாலம்பூர், மே 24-

கடந்த சனிக்கிழமை மே 18ஆம் திகதி, ஆகமம் அணி என்ற இயக்கத்தின் நடப்புத்தலைவர் என்று கூறிக்கொள்ளும் அருண் துரைசாமி என்பவர் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

அந்த செய்திக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைத்தோம். அருண் துரைசாமி, இந்தக் கூட்டத்தில், ஒரு “நில ஒப்பந்த” வழக்கு விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவரிடம் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

அவரது இந்த செய்தி அறிக்கை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கும் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜ அவர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. அதை விட அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்தப் புகாரினை  செய்யும் அருண் துரைசாமி 5-6-2014-ல் திவால் ஆனவர் என்று
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

அவர் திவாலாக அறிவிக்கப்பட்ட பொழுது இந்த ஆகமம் அணி என்ற இயக்கம் இன்னும் தோற்றுவிக்கப்படவில்லை. இந்த இயக்கம் 14-2-2019-ல் தான் முறையாக பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வியக்கத்தின் அமைப்புச்சட்டத்தில், சமய விழாக்களை ஏற்பாடு செய்வது மற்றும் சமய விழாக்களுக்கு ஆதரவளிப்பது போன்றவை இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 19-ஆம் திகதி, தேவஸ்தானம் அருண் துரைசாமிக்கு எதிராக தடையுத்தரவு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, 1-04-2019 -ஆம் நாள் வெற்றிகரமாக தடையுத்தரவையும் பெற்றுள்ளது.

இத்தடையுத்தரவின்படி அருண் துரைசாமி, அவர்தம் ஊழியர்கள், முகவர்கள், எவரும் எழுத்துருவிலும் வாய்ச்சொல்லிலும், பல்லூடகங்கள் வாயிலாகவோ பிரசுரங்கள் வாயிலாகவோ, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஆலயங்கள், தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா ஆகியோரை சார்ந்து எந்த ஒரு அறிக்கையோ, விமர்சனமோ, விவாதமோ செய்யக்கூடாது. மீறும் பட்ச்சத்தில் நஷ்ட்ட ஈடும் சட்ட நடிவடிக்கைக்கு உண்டான செலவினங்களையும் வழங்க வேண்டும்.

அந்த வகையில், அருண் அவர்கள் அண்மையில் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தையும், தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜாவையும் குறிப்பிட்டுள்ளதால் அது நீதிமன்ற தடையுத்தரவிற்கு புறம்பானதாகும். ஆகையால் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்.

மேலும் அருண், தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை, குறிப்பாக பத்துமலை கோவிலின் படங்களை தம்முடைய பல்லூடக பதிவுகளில் பயன்படுத்துகிறார். இது பத்துமலை மற்றும் தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இதைத் தடுப்பதற்கு 17-5-2019-ஆம் நாள் தேவஸ்தான செயலாளரும் அறங்காவளரும் மீண்டும் ஒரு போலீஸ் புகார் செய்துள்ளனர். அருண் போன்றவர்களின் இத்தகைய தரக்குறைவான செயல்களை தேவஸ்தானம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்த்தானம், தமது நற்பெயருக்கோ தமது கோவில்களின் மேல் பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் யார் செயல் பட்டாலும் அவர்களின் மேல் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறது.

1888-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்த்தானம், நூற்றாண்டு கால வரலாறும் பெருமையும் கொண்டுள்ளது. மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்துமலைத் திருத்தலம், கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் ஆகிய மூன்று ஆலயங்ககளை பரிபாலனம் செய்து வருகிறது. இக்கோவில்கள் தொடர்ந்து பக்த்தர்களுக்கு சிறந்த முறையில் செயல்பட்டு சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள அருண் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தை பற்றி மலேசிய ஊழல் தடுப்பு ஆணயத்திடம் விளக்கம் கூற தேவஸ்தானத்தின் சட்ட நிபுணர்கள் குழு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இப்படிக்கு,
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்த்தின் சார்பில்

ஸ்ரீ. சிவகுமார். G
பொதுத் தொடர்பு வியூக இயக்குனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன