புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > இந்தியப் பெண்களுக்கு ஒப்பனை கலையில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர புதிய முயற்சி! – குணவதி தகவல்
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்தியப் பெண்களுக்கு ஒப்பனை கலையில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர புதிய முயற்சி! – குணவதி தகவல்

பெட்டாலிங் ஜெயா, மே 24-

இந்தியப் பெண்களுக்கு ஒப்பனை கலையில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மலேசிய திரைப்பட ஒப்பனை கலைஞர்கள் இயக்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் குணவதி கூறியுள்ளார்.

இந்திய பெண்கள் பலர் வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு தாங்கள் அழகு போட்டிகள் வழி வாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருப்பதாக ரேஷ்வாணி அழகு நிலையம் நடத்திய போலிவூட் அழகுராணி போட்டி நிகழ்வில் அதன் தோற்றுநருமான குணவதி அவ்வாறு தெரிவித்தார்.

இந்தியப் பெண்கள் ஒப்பனை கலையில் ஈடுபாடு காட்ட இத்தகைய அழகு ராணி ஒப்பனை போட்டிகள் பாலமாக இருக்கும் என்று நம்புவதாக குணவதி நம்பிக்கை சொன்னார்.

இந்தியப் பெண்கள் ஒப்பனை கலை வழி பொருளாதாரத்தை ஈட்ட முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்த ஒப்பனை கலை திருமணம் போன்ற ஒப்பனைகளுக்கு மட்டுமல்லாமல் மலேசிய சினிமா துறையில் கலைஞர்களுக்கும் ஒப்பனை செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று மலேசிய திரைப்பட ஒப்பனை கலைஞர்கள் அமைப்பின் தலைவருமான குணவதி தெரிவித்தார்.

மலேசியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பல கூறுகளில் பிரிந்து கிடப்பதால் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இத்தகைய பெண்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் ரேஷ்வாணி அழகு நிலையத்தின் ஏற்பாட்டில் பாலிவுட் அழகு ராணி போட்டியை நடத்தியதாக குணவதி சொன்னார்.

இந்திய பெண்களுக்கு ஒப்பனை கலையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு நல்ல வழிகாட்டல் இல்லை. இதனால் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

ஆகையால், இத்தகைய போட்டிகள் வழி இந்திய பெண்கள் அழகு கலையில் அதிக ஆர்வம் காட்டுவதோடு வாய்ப்பை தேடிக் கொள்ள முடியும் என்பதற்காகவே பாலிவுட் அழகு ராணி போட்டியை ஒரு பாலமாக பயன்படுத்தி கொள்ள முயல்வதாக மலேசிய திரைப்பட ஒப்பனை கலைஞர்கள் அமைப்பின் ஆலோசகர் முத்துகுமரன் குறிப்பிட்டார்.

இந்த பாலிவுட் அழகு ராணி போட்டியில் மொத்தம் 21 ஒப்பனை கலைஞர்கள் தாங்கள் ஒப்பனை செய்த மாடல் அழகிகளுடன் போட்டியில் பங்கேற்றனர். இதில் முதல் நிலையில் வெற்றி பெற்ற லிங்கேஸ்வரி அப்பன்னாவுக்கு 14 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள எஸ்கேஎம் 2, எஸ்கேஎம் 3 படிக்க உபகார சம்பளம், 500 வெள்ளி வழங்கப்பட்டது.

இரண்டாவது நிலையில் வெற்றி பெற்ற மலர்விழி விசயகுமாரனுக்கு 8,500 வெள்ளி மதிப்புள்ள எஸ்கேஎம் 2 படிக்க உபகார சம்பளம், 500 வெள்ளி வழங்கப்பட்டது.இப்பரிசுகளை ஜஸ்டினா அழகு நிலையம் வழங்கியது. மூன்றாவது நிலையில் வெற்றி பெற்ற மகேஸ்வரி அம்மாவுக்கு 500 வெள்ளி ரொக்கம், டிரிம் கேஸ்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றியாளர்களுக்கு ஃபினாஸ் திரைப்பட மேம்பாட்டு வாரிய உறுப்பினர் மோகன் ராவ் 500 வெள்ளி ரொக்கப் பரிசுகள், ஒப்பனை கல்லூரியில் இலவசமாக பயில பற்றுச்சீட்டு உள்ளிட்ட பரிசுகளை எடுத்து வழங்கினர்.

இந்நிகழ்வில் டிரிம் கேஸ்டல் ஒப்பனை கல்லூரியின் தலைவர் சிவரம்பா, ஜஸ்டினா அழகு நிலையத்தின் உரிமையாளர் ஜஸ்டினா, மிண்ட்ரா தலைவர் எம்.சிவா, மை ஃபெம் தலைவர் கவிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன