புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம்!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம்!

புதுடெல்லி மே 24 –
நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணா திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அந்த கூட்டணியின் முக்கிய கட்சியான அண்ணா திமுக கூட ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது .அதுவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பன்னீர்செல்வத்தின் புதல்வர் மட்டுமே வெற்றி பெற்றார். பாஜக முன்னணித் தலைவர்கள் அனைவரும் தோல்வி கண்டனர்.

இந்த நிலையில் புதிய இந்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது இருவரை மத்திய அமைச்சராக நியமிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

இதற்கு முன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார் .

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய அமைச்சரவையை அமைக்கும்போது தமிழகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தால் அது கட்சியை வளர்க்க முடியாது என்பதை பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத்துவம் உணர்ந்துள்ளது.

கட்சியின் மேலிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் இன்று புதுடில்லி புறப்படுவார் என தமிழக தகவல்கள் கூறுகின்றன. அவர் மேல்சபை உறுப்பினரராக நியமிக்கப்பட்டு
அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படும் சாத்தியம் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன