முகப்பு > சமூகம் > தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் சசூகே நிறுவனம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் சசூகே நிறுவனம்!

கோலாலம்பூர் மே 25-

உயர்தர ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மலேசியாவின் முதன்மை நிறுவனமான சசூகே ஹவுட்லெட் சமுதாய சேவையிலும் தனி முத்திரை பதித்து வருகின்றது.

அண்மையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மூன்று மாதங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து ஆடைகளை வாங்கிய வர்த்தகர்களின் உதவியுடன் தொடர் நலத்திட்டங்களை இவர்கள் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது நாட்டில் உள்ள மலாய் கலைஞர்களை ஒன்றிணைத்து கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் அதன் மூலம் திரட்டப்படும் நிதியில் துணையோடு தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவவும் நிறுவனம் முன்வந்திருக்கின்றது.

தவ்கே எப்சி கால்பந்து இயக்கத்துடன் சசூகே நிறுவனமும் கைகோர்த்துள்ளது. தொடர்ந்து பல நட்புமுறை ஆட்டங்களில் இந்த இயக்கம் கலந்து கொள்கின்றது. அந்த விளையாட்டுகளில் உண்டியல் ஏந்தி இவர்கள் பணம் திரட்டுகிறார்கள். அதன் மூலம் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வருவதாக நிறுவனத்தின் விளம்பர அதிகாரி நூர் ஹத்திரா தெரிவித்தார்.

இது தொடக்கம்தான். இந்த நடவடிக்கை தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதோடு நடவடிக்கை வெற்றி அடைய உதவி புரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். முன்னதாக இந்த கால்பந்து விளையாட்டில் பங்குக்கும் விளையாட்டாளர்களுக்கு சசூகே நிறுவனம் ஜெர்சி வழங்கியது.

சசூகே நிறுவனத்தின் சமுதாயச் சேவை தொடர்கிறது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன