முகப்பு > சமூகம் > புக்கிட் மஞ்சோங் பூர்வகுடி மக்களுக்கு மாலிக் ஸ்திரிம் நிறுவனத்தின் ரம்லான் மாத பொருள், நிதியுதவி
சமூகம்முதன்மைச் செய்திகள்

புக்கிட் மஞ்சோங் பூர்வகுடி மக்களுக்கு மாலிக் ஸ்திரிம் நிறுவனத்தின் ரம்லான் மாத பொருள், நிதியுதவி

புக்கிட் பெருந்தோங், மே 25-

ரமலான் மாதத்தை முன்னிட்டு sukarelawan Anak Malaysiaவுடன் இணைந்து பல நிறுவனங்கள் பூர்வகுடி மக்களுக்கு பொதுநல உதவிகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது. அவ்வகையில், புக்கிட் மஞ்சோங்கில் வசிக்கும் சுமார் 300 பூர்வகுடி மக்களுக்கு பொருள் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்வை நேற்று ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்விற்கு முதன்மை ஆதரவாளர்களான மாலிக் ஸ்திரிம் நிறுவனத்துடன் இணைந்து மிசாஜ், கே.எல். இல்ஹாம் ஹோல்டிங்ஸ், அலி என்செட், எஸ்.எம்.எஸ். டீன் ஜுவலர்ஸ், லைன் கிலியர், ஒய்.எஸ். மாஜூ உணவகம் மற்றும் ஏசெட் திராவல் என் டுவர் ஆகிய நிறுவனங்களும் ஆதரவு வழங்கின. இந்த ரம்லான் மாதத்தில் புக்கிட் மஞ்சோங் பூர்வகுடி மக்களுக்கு பொதுநல உதவிகளை செய்வது மாலிக் ஸ்திரிம் நிறுவனத்தில் பெரிய முயற்சியாகும்.

இது குறித்து மாலிக் ஸ்திரிம் நிறுவனத்தின் தலைவர் மாலிக் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளாக இந்த பொதுநல உதவித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நிதி மற்றும் பொருளுதவி வழங்குவதற்கு சுமார் வெ.30,000 செலவிடப்படும்.

ஆனால், இவ்வாண்டு மாலிக் ஸ்திரிம் நிறுவனத்தின் முயற்சியில் தேவையான அடிப்படை பொருட்களையும் நிதியையும் வழங்கியதால் சுமார் வெ.70,000 செலவிடப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த பூர்வகுடி மக்கள் வாழும் புக்கிட் மஞ்சோங் பகுதியில் 500 வீடுகள் உள்ளன. அதில் குடும்ப பின்னணியை வைத்து அங்குள்ள மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

வறுமையில் இருக்கும் பூர்வகுடி மக்களின் சுமையை குறைக்கவும் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த உதவித் திட்டம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்கள் நல்லுறவை வலுப்படுத்தும். இதுபோன்ற உதவிகள் வழங்க பல நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன