அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

மஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்

கோலாலம்பூர் மே 27-

மலேசிய இந்திய காங்கிரசின் தலைமை செயலாளராக ஜோகூர் மாநில தலைவர் டத்தோ அசோகன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். முன்னதாக அவர் நிர்வாக செயலாளராக பணியாற்றி வந்தார்.

டத்தோ ஸ்ரீ வேள்பாரி க்கு பதிலாக அவர் தற்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார்.

அதற்கான உறுதி கடிதத்தையும் அவர் டத்தோ அசோகனிடம் வழங்கினார். அவர் வகித்து வந்த நிர்வாக செயலாளர் பதவிக்கு ஏகே இராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மஇகா தலைமையகத்தில் இந்த இருவருக்குமான உறுதி கடிதம் வழங்கப்பட்டது. இதில் டத்தோஸ்ரீ வேள்பாரியும் கலந்து கொண்டார்.

இவர்களுடன் மலேசிய இந்திய காங்கிரசின் உச்ச மன்ற உறுப்பினர்கள், குறிப்பாக அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் கலந்து கொண்டார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன