அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > தமது வங்கி கணக்கில் 4 கோடியே 20 லட்சம்!   – நஜிப் அதிர்ச்சி
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தமது வங்கி கணக்கில் 4 கோடியே 20 லட்சம்!   – நஜிப் அதிர்ச்சி

கோலாலம்பூர் மே 29-

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கி டையே ஏசான் பெர்டனா சென்.பெர்ஹாட் மூலமாக தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் யாரோ ஒருவர் 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை பரிமாற்றம் செய்ததை அறிந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் அதிர்ச்சி அடைந்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

I.B.S.B நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் சம்சுல் அன்வார் சுலைமான் இதனைத் தெரிவித்தார் .நஜீப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்த போது சம்சுல் இத்தகவலை வெளியிட்டார்.

2015ஆம் ஆண்டு மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தம்மை கைது செய்து விடுவித்த பின்னர் நஜீப் ரசாக்கை அவரது வீட்டில் சந்தித்ததாகவும் அப்போது அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி இருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்ததாக சம்சுல் கூறினார்.

தாம் கைது செய்யப்பட்டது மற்றும் தமது நலம் குறித்து நஜீப்பிற்கு விளக்கம் அளிப்பதற்காக அவரை சந்தித்ததாக ஷாபியின் கேள்விக்கு பதிலளித்த போது அவர் தெரிவித்தார்.

தமக்கு தெரியாமலேயே மற்றொரு நிறுவனத்தின் மூலம் தமது வங்கிக் கணக்கில் யாரோ ஒருவர் இந்த பணத்தை பரிமாற்றம் செய்ததாக நஜீப் தெரிவித்தார். .எனினும் இந்த விவகாரம் குறித்து தாம் அவரிடம் மேலும் விவாதிக்க வில்லை என சம்சுல் கூறினார்.

எஸ் ஆர் சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டின் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி முறைகேடு சம்பந்தமாக நஜீப் நம்பிக்கை மோசடி உட்பட ஏழு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் . இந்த வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பின் 37வது சாட்சியான சம்சுல் சாட்சியமளித்தார்.

இதனிடையே தமது வங்கிக் கணக்கில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் போலீசில் புகார் செய்யும்படி நஜீப் கேட்டுக் கொண்டாரா என்று அரசு தரப்பு வழக்கறிஞர் டி.பி.பி முகமட் சைபுடின் ஹசிம் வினவியபோது இல்லை என சம்சுல் மறுமொழி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன