ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இணையம் வழி வர்த்தக வாய்ப்பு: யுக்திகளை பயன்படுத்தி முன்னேறுவீர்! – கணபதிராவ்
சமூகம்முதன்மைச் செய்திகள்

இணையம் வழி வர்த்தக வாய்ப்பு: யுக்திகளை பயன்படுத்தி முன்னேறுவீர்! – கணபதிராவ்

பூச்சோங், மே 30-

       காலச் சூழலுக்கு ஏற்ப அமையும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் தங்கள்  வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

         குறிப்பாக, இணையம் வழி மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில்  ஈடுபட அதன்  பயனீடு குறித்து  முழுமையாகக் கற்றுக் கொண்டால் நல்ல வருமானத்தை ஈட்டலாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார்.

      ஜவுளி தொடங்கி உணவு வகை வரையிலான வியாபாரம் இப்போது அபரிமித வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதைக் காண முடிகிறது. வியாபார யுக்திகளும் காலத்திற்கு ஏற்ற மாற்றமும்தான் இதற்குக் காரணம் என்று இங்குள்ள தங்கும் விடுதியில்  ‘மை மோல் 2யு’ இணைய வர்த்தக திட்டத்தைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

     “‘மை  மோல் 2யு’  வர்த்தகத்தில் ஈடுபட எவ்வித முதலீடும் தேவையில்லை. இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் போதுமானது. நிறைய விஷயங்களை இதன் வழி கற்றுக் கொள்ளலாம். வளமான வாழ்க்கைக்கு பொருள் வளமே அஸ்திவாரம். இதனைக் கருத்தில் கொண்டு காலத்திற்கு ஏற்ற வர்த்தகத்தில் ஈடுபட இந்தியர்கள் முன் வர வேண்டும் ” என்றார்.

      தான் ஈடுபடும் ஒவ்வொரு வியாபாரத்திலும் புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் “‘மை  மோல் 2யு’ நிறுவனத்தின் நிர்வாகி திருமுருகனின் முயற்சியை கணபதி ராவ் பாராட்டினார்.  தற்போதைய பரபரப்பான சூழலில்  வீட்டில் இருந்தபடியே கை  நிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்பை  ‘மை மோல் 2யு’ வழங்குகிறது என்று திருமுருகன் கூறினார்.

       உலகமே கையடக்கத் தொலைபேசிக்குள்  அடங்கியிருக்கும் காலம் இது.  இந்தக் கைபேசியை  வர்த்தகத்திற்குப் பயன்படுத்தி வாழ்க்கையில்  முன்னேற்றம் காணலாம் என்றார் அவர்.  ஆடை அலங்கார பொருள்கள், கைப்பைகள், தளவாட பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சாதனங்களை ‘மை மோல் 2யு’ இணையம் வழி விற்பனை செய்து வருகிறது.

       தரமான இச்சாதனங்களை ஆர்டர் செய்வோரின்  வீட்டிற்கே  பொருள்கள்  வந்து சேரும். வாடிக்கையாளர்கள் தரமான பொருள்களைப் பெறுவதற்காக வெகு தொலைவுக்குச் செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இப்பொருள்களைப் பெறலாம்  என்று அவர் விவரித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன