முகப்பு > விளையாட்டு > செல்சியுடன் கடைசி வெற்றி – எடின் ஹசார்ட் !
விளையாட்டு

செல்சியுடன் கடைசி வெற்றி – எடின் ஹசார்ட் !

பாக்கு, மே.30 –

செல்சியின் தாக்குதல் ஆட்டக்காரர் எடின் ஹசார்ட் அடுத்த பருவத்தில் அந்த கிளப்பில் இடம்பெற மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. புதன்கிழமை செல்சியுடன் யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற ஹசார்ட், இதுவே அந்த கிளப்புடனான தனது கடைசி வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

அசர்பைஜானின் பாக்கு நகரில் நடந்த யூரோப்பா லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் செல்சி  4 – 1 என்ற கோல்களில் அர்செனலைப் பந்தாடியது. இந்த ஆட்டத்தில் செல்சியின் உச்ச நட்சத்திரம் எடின் ஹசார்ட் இரண்டு கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்தார்.இந்நிலையில் ஹசார்ட் செல்சியில் இருந்து வெளியேற விருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

அதனை நிரூபிக்கும் வகையில் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹசார்ட், செல்சி அணியில் இதுவே தமது கடைசி வெற்றி என குறிப்பிட்டுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற தமது ஆசை நிறைவேறியிருப்பதாகவும் இனி இதர லீக் போட்டியின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

27 வயதுடைய ஹசார்ட்டை, ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் விலைக்கு வாங்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஹசார்ட்டை  வாங்குவதற்காக ரியல் மாட்ரிட் 11 கோடி ஈரோ டாலரை செலவிட தயாராக உள்ளது. ரியல் மாட்ரிட் பயிற்றுனர் சினிடின் சிடான் மிகப் பெரிய அளவில் தமது அணியில் மாற்றங்களை மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன