புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > `இந்திய அளவில் ட்ரெண்டான #Pray_for_Neasamani!’
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

`இந்திய அளவில் ட்ரெண்டான #Pray_for_Neasamani!’

சென்னை, மே.30 –

சமூக வலைதளங்களையும், நெட்டிசன்களையும் புரிந்துகொள்ளவே முடியாது. எப்போது எது ட்ரெண்ட் ஆகும், யார் சர்ச்சையில் மாட்டுவார் என எதையுமே கணிக்கமுடியாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லலாம். `நீ இன்னைக்கு வேணும்னா ட்ரெண்டிங்ல இருக்கலாம், அவர் எப்போவுமே ட்ரெண்டிங்தான்டா’ என்று கூறும் அளவுக்கு வடிவேலு முகத்தைப் பார்க்காமல் உங்களால் சமூக வலைதளங்களைக் கடந்துவந்துவிடமுடியாது.

மீம் கிரியேட்டர்களுக்குப் பஞ்சம் வரும்போதெல்லாம் `தெல்பத்ரி சிங்’ என அவரின் பழைய காமெடிக் காட்சிகளைத்தான் தூசுதட்டுவர். அப்படித் தேர்தல் முடிந்து கொஞ்சம் வறட்சியில் இருந்த நெட்டிசன்களுக்குக் கிடைத்த பம்பர் பரிசுதான் இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக்.

எங்கிருந்து இது ஆரம்பித்தது எனப் பார்த்தால் `Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம்தான் இதற்கு விதை போட்டிருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் இந்தப் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்’ எனக் கேட்க விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம்’ எனப் பிரபல ஃப்ரெண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமென்ட்டிட்டார்.

உடனே நம் மக்கள் அனைவரும் ஒன்றுகூடிவிட்டனர். பிரேக்கிங் நியூஸ் டெம்ப்ளேட் வீடியோ முதல் பலவிதமாக இதை நம் மக்கள் பதிவிட தொடங்க இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக் ஃபேஸ்புக்கில் வைரலானது. இது அப்படியே ட்விட்டருக்கும் சென்று இந்தியா அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது. 2000-ங்களில் வந்த இந்தக் காட்சி இப்போது வைரலாவதைப் பார்க்கும்போது ஃப்ரெண்ட்ஸ் பட காமெடிக்கும், வடிவேலுக்கும் எண்டுகார்டே கிடையாது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன