திங்கட்கிழமை, மே 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > மோடி அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம்பெ றவில்லை!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மோடி அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம்பெ றவில்லை!

புதுடில்லி மே 31-

அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று மீண்டும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கிறார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 முதல் 60 பேர்வரை மோடி அமைச்சரவையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடிக்கு மிக நெருக்கமானவர் என கருதப்படும் அருண் ஜேட்லி உடல்நிலை காரணமாக மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை பெற்று அபார வெற்றி பெற்றது. முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி  பதவி ஏற்றார்.

அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி உறுதிமொழி செய்து வைத்தார் இதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகம் சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன