கோலாலம்பூர் மே 31-

மூன்று மாநிலங்களில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து மூன்று ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் படை தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் இதனைத் தெரிவித்தார்.

ஒருவன் உள்நாட்டுச் சேர்ந்தவன் என்றும் மற்றொருவன் வங்காளதேசத்தையும் இன்னொரு நபர் இந்தோனிசியாவையும் சேர்ந்தவன் என அப்துல் ஹமிட் கூறினார். சிலாங்கூர், கெடா, சபா ஆகிய மாநிலங்களில் மே 17 மற்றும் மே 30ஆம் தேதி பயங்கரவாத துடைத்தொழிப்பு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது அந்த 3 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மே 17 ஆம் தேதி கே. எல். ஐ .ஏ. விமான நிலையத்தில் 42 வயதுடைய மலேசிய குத்தகையாளர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். செனாய்யிலுள்ள உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக அந்த சந்தேகப் பேர்வழி எகிப்து புறப்படுவதற்கு  திட்டமிட்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக அப்துல் ஹமிட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நபர் சிரியாவிற்கும் செல்வதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் கூறினார். 20 வயதுடைய இந்தோனேசிய ஆடவன் தென் பிலிப்பின்சிற்கு தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு புறப்படுவதற்கு முன்னர் சபாவில் கைது செய்யப்பட்டான் என அப்துல் ஹமிட் கூறினார்.

மே 26-ஆம் தேதி இந்த சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டான் . ஆகக் கடைசியாக கோலாகெடாவில் 28 வயதுடைய வங்காளதேச ஆடவன் கைது செய்யப்பட்டான் . கப்பலில் மெக்கானிக்காக வேலை செய்து வந்த அவன் ரசாயன துறையில் அனுபவம் பெற்றிருந்ததோடு வெடிகுண்டுகளை செய்வதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்ததாக அப்துல் ஹமிட் கூறினார்.

தப்பி ஓடியதாக நம்பப்படும் மற்றொரு இந்தோனேசியஆடவனை போலீசார் தேடி வருகின்றனர்.