புத்ராஜெயா மே 31-

நாடு திரும்பும் அந்நியத் தொழிலாளர்களுக்கு பதிலாக மாற்று தொழிலாளர்களை கொண்டு வரும் கொள்கை மீண்டும் அமலாக்கத்திற்கு வருவதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

மே 29 ஆம் தேதி மலேசிய அரசாங்கம் அனைத்து துறைகளுக்கும் வெளி தேர்வு அறிக்கை அணுகுமுறை வாயிலாக அந்நியத் தொழிலாளர்களை மற்றும் கொள்கையை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த அமலாக்கம் நடைமுறைக்கு வருகின்றது.

இக்கொள்கையை மீண்டும் அவல்படுத்தப்பட்டதன் வழி முதலாளிமார்கள் தாயகம் திரும்பிய தங்களின் தொழிலாளர்களுக்கு பதிலாக வேறு அந்நிய நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக இவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்ய தேவையில்லை.

இந்த நடைமுறை நடப்பு அந்நிய நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காது. ஆக இதற்கு முன்பு முதலாளி மார்க்கெட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கையை நிலைநிறுத்தும் என மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது.

அந்நியத் தொழிலாளர்களை மாற்றுவதற்கான இந்த ஒப்புதல் ஒவ்வொரு துறையின் தேவைகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என மனிதவள அமைச்சர் குலசேகரன் குறிப்பிட்டுள்ளார். அந்நியத் தொழிலாளர்களை மாற்றுவதற்கான விண்ணப்பம் குறித்து முதலாளிமார்கள் உள்துறை அமைச்சின் கீழ் இயங்கி வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேளாண்மை பிரிவுடன் தொடர்பு கொள்ளலாம்.

இந்த ஒப்புதல் நாட்டின் வேலை பற்றாக்குறை பிரச்சனைகளையும் தொழில் துறையில் ஏற்படும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகளையும் பாதிக்காமல் இருப்பதற்கு உதவுகின்றது என குலசேகரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.