முகப்பு > சமூகம் > மனிதவள அமைச்சு நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கின்றது! – இந்திய வர்த்தகர்கள் மகிழ்ச்சி
சமூகம்முதன்மைச் செய்திகள்

மனிதவள அமைச்சு நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கின்றது! – இந்திய வர்த்தகர்கள் மகிழ்ச்சி

கோலாலம்பூர் மே 31-

அந்நியத் தொழிலாளர்களை மற்றும் கொள்கையை மீண்டும் அமல்படுத்தி இருக்கும் மனிதவள அமைச்சு நடவடிக்கை இந்த நாட்டிலுள்ள இந்திய வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் மைக்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது மலேசிய இந்திய வர்த்தகர்களின் சுமையை குறைக்கும் என அச்சங்கத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். தொழிலாளர்கள் தேவைப்படும் வர்த்தகர்கள் நேரடியாக அந்நியத் தொழிலாளர்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.

தொழிலாளர்களை மாற்றும் நடைமுறைகளை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பது மலேசிய இந்திய வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதே நேரத்தில் இதில் இருக்கும் இதர பிரச்சனைகளையும் அரசு நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் உள்ள இந்தியர்களின் முதன்மை ஆறு துறைகளில் அந்நியத் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசு தடை விதித்து இருக்கின்றது. அந்த தடையை அரசு அகற்ற வேண்டும். வெளிநாட்டு தொழிலாளர் தேவைப்படும் வர்த்தகர்களுக்கு அரசு நேரடியாக பணியாளர்களை வழங்க வேண்டும். அப்படி நடந்தால் இது மிகச் சிறந்த நடைமுறையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண, 20 இந்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் இணைந்து, மாபெரும் கலந்துரையாடலை நடத்துவது உறுதியென டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜூன் 11 ஆம் தேதி பிரிக்பில்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் மாபெரும் ஒன்றுகூடல் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து ஒரு மகஜரும் உருவாக்கி அதனை பிரதமர் உட்பட மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் மேம்பாட்டு விவகார அமைச்சு ஆகியவற்றிடம் வழங்கவிருப்பதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு அந்நியத் தொழிலாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசு இந்த நடைமுறையை முன்னெடுத்ததோ அதே நடைமுறையை இப்போது செயல்படுத்த வேண்டும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் அயூப் கான் தெரிவித்தார்.

மலேசிய இந்திய நகை வியாபாரிகள் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல், மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி உட்பட மலேசியாவின் முதன்மைத் தொழில் துறையைச் சார்ந்த பல சங்கங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன