இ.பி.எப் தொகை செலுத்தவில்லை; நிர்வாகத்திற்கு எதிராக லோரி ஓட்டுனர்கள் புகார்

0
3

ஈப்போ.ஜுன் 2-

இ.பி.எப் தொகை செலுத்தத் தவறிய நிர்வாகத்திற்கு எதிராக லோரி ஓட்டுனர்கள் போலீசில் புகார் செய்தனர். ஈப்போ கிராமாட்  பூலாய் தொழில்மய பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து நிறுவனத்திற்கு எதிராக  போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

GBL  எனப்படும் லோரி ஓட்டுனர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இ.பி.எப் தலைமையகத்தில்  சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு எதிராக புகார் செய்துள்ளது.

பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலீச கட்சியின் ஆதரவோடு பிரச்னைக்கு உள்ளான லோரி ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் லோரி ஓட்டுனர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இ.பி.எப் சட்டவிதிகளுக்கு ஏற்ப இ.பி..எப் தொகையை செலுத்தத் தவறியது மற்றும் குறைவான இ.பி.எப் தொகையை செலுத்தியதால் நிர்வாகத்திற்கு எதிராக  லோரி ஓட்டுனர்கள் புகார் செய்துள்ளனர்.

அதோடு இந்த விவகாரத்தில் தாங்கள் வேலை செய்துவரும் நிறுவனத்தின் நிர்வாகம் பல்வேறு நெருக்குதல்களை கொடுத்து வருவதாகவும் லோரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.