புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > 2 வயது வளர்ப்பு மகன் கொலை; ஆடவர் மீது குற்றச்சாட்டு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

2 வயது வளர்ப்பு மகன் கொலை; ஆடவர் மீது குற்றச்சாட்டு

குருன், ஜுன் 2-

இரண்டு வயது வளர்ப்பு மகனை கொலை செய்ததாக வேலையில்லாத ஆடவர் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம்  யானில் உள்ள ஒரு வீட்டில் அந்த நபர்  அந்த குற்றத்தை  புரிந்ததாக  கூறப்பட்டது.

மாஜிஸ்திரேட் நுருல்ரஸிடா முகமட் அக்கிட் முன்னிலையில்  குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது  சோபியூடின் அபு பாக்கார் குற்றச்சாட்டு புரிந்துகொண்டதுபோல தலையசைத்தார். எனினும் அவரிடம்  வாக்குமூலமும் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மே 25ம் தேதி இரவு மணி 7.30க்கும் 8.00 மணிக்குமிடையே ஜாலான் யான்- குவார் செம்படாக்கில் உள்ள ஒரு வீட்டில்  முகமட் அக்கில் ஹைரி என்ற சிறுவனை    கொலை செய்ததாக சோபியுடின்   மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 302  ஆவது விதியின்  கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது

இதனிடையே மற்றொரு நீதிமன்றத்தில் அந்த சிறுவனின் தாயாரான நுருல் நட்டாஷா 10,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். துன்புறுத்தப்பட்டதால் 2 வயது சிறுவன் இறந்ததைத் தொடர்ந்து மே 27ம் தேதி விசாரணைக்காக அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன