புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சிறுவனின் கழுத்தில் பானையின் மூடி சிக்கிக்கொண்டது தீயணைப்பு படையின் உதவியோடு வெளியே எடுக்கப்பட்டது
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிறுவனின் கழுத்தில் பானையின் மூடி சிக்கிக்கொண்டது தீயணைப்பு படையின் உதவியோடு வெளியே எடுக்கப்பட்டது

கோலாலம்பூர் ஜூன் 2-

ஆறு வயது சிறுவனின் கழுத்தில் பானையின் மூடி சிக்கிக்கொண்டதால் தீயணைப்புப் படை வீரர்களின் உதவியோடு  அந்த  மூடி வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் இரவு 8 மணி அளவில் தாமான் அம்பாங்  இண்டாவில் உள்ள அந்த சிறுவனின் வீட்டில் நிகழ்ந்தது.

பானை  மூடியின் மேற்பகுதியை கையில் எடுத்துக்கொண்டு காலிஸ் அக்கில் என்ற அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்தப் பானையின் மூடிப் பகுதியில் இருக்க வேண்டிய கண்ணாடி காலியாக இருந்ததால்  அந்த சிறுவன் தனது கழுத்தில்  மூடியை போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். எனினும் அந்த சிறுவனின் கழுத்தில் இருந்து அந்த மூடியை கழற்ற முடியாத காரணத்தினால் அவனது தாயார் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இதனைத் தொடர்ந்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அம்பாங் தீ மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 8 தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டிற்கு வந்து  சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி  பானையின் மேற்பகுதியை வெட்டி அதனை சிறுவனின்  வெளியே எடுத்ததாக சிலாங்கூர்  தீ மற்றும் மீட்பு துறையின் இயக்குனர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன