புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > வெ.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

வெ.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது

ஜோகூர்பாரு  ஜுன் 2

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என நம்பப்படும் மூவரை கைது செய்த போலீசார் 32 லட்சம் வெள்ளி மதிப்புடைய போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன் ஜொகூர் பாரு நகரில் மேற்கொள்ளப்பட்ட  நான்கு வெவ்வேறு சோதனை நடவடிக்கையின்போது அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர் .இதனை ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலில் காதீர் முகமட் தெரிவித்தார்.

ஜோகூர் போலீஸ் மற்றும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் விசாரணை துறையின் அதிகாரிகளுக்கிடையே இருந்து வந்த ஒத்துழைப்பின் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் அந்த கும்பலின் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதாக  முகமட் காலில் கூறினார்.

இந்த கும்பலின் மூல கர்த்தாக்கள் என நம்பப்படும் 27 மற்றும் 31 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் வெவ்வேறு இடங்களில் மாலை 3 மணிக்கும் காலை 6 மணிக்கும் இடையே தாமான் மவுன் ஹாஸ்டினிலுள்ள ஒரு வீடு மற்றும் கிடங்கிலும் ,கூலாய் டோல் சாவடியிலும் , தாமான்  தேசா தெப்ராவில் ஒரு வீட்டிலும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலிடம்  17,450 போதை மாத்திரைகள், போதை பவுடர்கள் 119,400 எராமின் பரவச மாத்திரைகள், 220 கிராம் கெத்தாமின், 415 கிரேம் ஷாபு திரவமய  போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் காலில் கூறினார்.

அனைத்துலக மற்றும் உள்நாட்டு போதைப்பொருள் சந்தைக்காக இந்த போதைப் பொருட்கள்  வடமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட தாக  நம்பப்படுகிறது. போதைப் பொருளை தவிர ஒரு மெர்சிடிஸ் கார், ஒரு டொயோட்டா  வியோஸ் கார், ஒரு சங்கிலி, 2 மோதிரங்கள்,ரோலக்ஸ் மற்றும் கசியோ கைக்கடிகாரங்கள் மற்றும் 2,350 வெள்ளி ரொக்கத் தொகையும் அந்த கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக  முகமட் காலில் தெரிவித்தார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் ஜூன் 7-ஆம் தேதி வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆப்ஸ் செலமாட் சாலை பாதுகாப்பு இயக்கம் மே 29ஆம் தேதி தொடங்கப்பட்டது முதல் ஜோகூரில் 1,068 சாலை விபத்துக்கள் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன