கோலாலம்பூர், ஜூன் 4-

ஈகைத் திருநாளான நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இந்த இனிய தருணத்தில் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பல்லின மக்கள் வாழும் புண்ணிய பூமியான மலேசியத் திருநாட்டில் நோன்பு பெருநாள் நம்மிடையே ஒற்றிமையையும் சகோதரத்துவத்தையும் சமய நல்லிணக்கத்தையும் மேலோங்க செய்யும் தேசியத் திருநாளாக திகழ்கிறது.

சில காரணங்ளுக்காக மக்களிடையே அவ்வப்போது ஏற்படும் சமய பேதமைகளை அகற்றி, மலேசியர் எனற் உணர்வை மனத்தில் விதைப்போம். ஒற்றுமை எனும் வேள்வி தான் நாட்டின் முன்னேற்றத்தின் தாரக மந்திரமாகும். சமய நல்லிணக்க உணர்வு தான் ஒற்றுமைக்கு அடிப்படையாகும்.

மேலும் இன்றைய திருநாளை மகிழ்ச்சியுடனும் கட்டுபாட்டுடனும் கொண்டாடும் முஸ்லிம் பெருமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் வளங்களைப் பெற்று சிறக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழ் முஸ்லிம் சமுதாயம் சிறந்து விளங்க தொடர் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த தருணத்தில் அனைவரின் வாழ்க்கையும் பிரகாசிக்க வேண்டும்.

மலேசியா மக்கள் அனவருக்கும் முன்மாதிரியாக விளங்கிட, வலிமையும் வளமும் மிக்க சமுதாயம் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று புனித நோன்பு பெருநாளில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதோடு நாம் அனைவருக்கும் இந்திருநாள் புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் வழங்கும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். இன்றையத் திருநாளில், அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கின்றேன் என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் மாண்புமிகு செனட்டர் டத்தோ மா.சம்பந்தன் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்