திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமைச்சர்கள் கடுமையாக  வேலை செய்ய வேண்டும் – டத்தோ காடிர் ஜாசின்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அமைச்சர்கள் கடுமையாக  வேலை செய்ய வேண்டும் – டத்தோ காடிர் ஜாசின்

கோலாலம்பூர், ஜூன் 4-

அமைச்சர்கள் குறிப்பாக பொருளாதாரம், நிதி மற்றும் வர்த்தகத்துறைக்கு பொறுப்பேற்று ள்ளவர்கள் மலேசியாவின் நிலை குறித்து  உலகிற்கு விளக்கம் அளிப்பதற்கான முயற்சியை தீவிரப்படுத்த வேண்டுமென  டத்தோ காடிர் ஜாசின் கேட்டுக்கொண்டார்.

அனைத்து அமைச்சர்களும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களை மட்டுமே நம்பியிருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் நீடித்த வாய்ப்புகள், வெற்றிகள் குறித்து உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களை கவர்வதற்கான முயற்சிகளில் அமைச்சர்களும் , நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகளும் இன்னும் ஈடுபடவில்லை என்றும் பிரதமரின் ஊடக ஆலோசகருமான காடிர் ஜாசின் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதிகமான பணிகளை நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் ஆற்றியிருக்க வேண்டும்  என  அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து பணிகளையும்  பிரதமர் செய்வார் என அல்லது பிரதமரிடம் விட்டுவிடுவது நியாயமான காரணமாக இருக்காது.

பொருளாதாரம் ,நிதி மற்றும் வர்த்தகத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும்  தங்களது திறனை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்திருப்பதாக காடிர் ஜாசின் கூறினார்.

 பொதுத் தேர்தல் நடைபெற்றது முதல் இப்போதைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அடைந்துள்ள பல்வேறு வெற்றிகள் குறித்து உலகம் அறியாமல் இருப்பதையும் காடிர் ஜாசின்  நினைவுறுத்தினார்.

சில தகவல்கள் ஆக்கபூர்வமாகவும் விவேகமாகவும் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினருக்கும் சென்றடையவில்லை என அவர் தெரிவித்தார்.

சில முக்கிய அமைச்சர்கள்  உள்நாடு  மற்றும் அனைத்துலக வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது குறித்தும்  தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக  அவர் சொன்னார்.

அமைச்சர்கள் பதவியேற்று  ஒரு ஆண்டுகளாகிவிட்டன. இதற்குப் பின்னரும் அவர்கள் போதுமான ஆற்றலையும் அனுபவத்தையும் கொண்டிருக்காவிட்டால் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்  காடிர் ஜாசின் கூறினார். அமைச்சர்கள் தங்களது  தினசரி பணிகளை அரசு ஊழியர்களும் விட்டு விடுவது ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்காது என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன