மின்னல் தாக்கி இளங்கோவன், காளியம்மா மற்றும் 3 வயது மகன் வினிஸ் மாண்டனர்

0
3

ஜெம்போல், ஜூன் 6-

கணவன் மனைவி மற்றும் அவர்களது மகனும் மின்னல் தாக்கி மாண்டனர்.  எஸ் இளங்கோவன் ( வயது 38), மனைவி காளியம்மா  (வயது 36) மற்றும் அவர்களது 3 வயது மகன் இ.வினேஸ் ஆகிய மூவரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டதாக  ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர்  சூப்பிரண்டன் முகமட் நுர் ஹிசாமுடின் கூறினார்.

ஆடுகள் பட்டிக்கு சென்ற அந்த மூவரும் திரும்பி வராதாதல் அங்கு சென்று பார்க்கும்படி அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் அண்டை வீட்டுக்காரரிடம் கேட்டுக்கொண்டதாக முகமட் நுர் தெரிவித்தார்.

இரவு மணி 11. 50 அளவில் தகவலறிந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அமர்ந்திருந்த மற்றும் படுத்திருந்த நிலையில் அவர்களது உடலை கண்டுள்ளனர்.

அந்த மூவரின் உடல்களை  காண்பதற்கு முன் அவர்களது மற்றொரு 9 வயதுடைய  பிள்ளை காலில் ஏற்பட்ட காயத்தோடு அழுது கொண்டிருந்ததை அண்டை வீட்டுக்காரர் முதலில் கண்டதாக முகமட் நுர் கூறினார்.

சம்பவம்  நிகழ்ந்தபோது கடுமையான மழை பெய்ததோடு தொடர்ந்து மின்னல் மின்னிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

அந்த ஆட்டுப் பட்டியில் தொடர்ந்து சோதனை மேற்கொண்ட போது மூன்று ஆடுகளும்  இரு நாய்களும் இறந்து கிடந்ததாகவும் அவற்றின் ரோமங்கள் எரிந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டதாக  முகமட் நுர் தெரிவித்தார்.