புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > 13 கோடி ஈரோ டாலரில் ரியல் மாட்ரிட்டில் இணைகிறார் ஹசார்ட் !
விளையாட்டு

13 கோடி ஈரோ டாலரில் ரியல் மாட்ரிட்டில் இணைகிறார் ஹசார்ட் !

லண்டன், ஜூன்.7 –

செல்சியின் தாக்குதல் ஆட்டக்காரர் எடின் ஹசார்ட், 13 கோடி ஈரோ டாலர் தொகையில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட்டில் இணைவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது. ஹசார்ட்டைப் பெறுவதற்கு மிகப் பெரிய தொகையை வழங்க ரியல் மாட்ரிட் ஒப்புக் கொண்டுள்ளதாக தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

ரியல் மாட்ரிட் அணிக்கு ஹசார்ட் மாற்றாலாகி செல்வது தொடர்பில் , செல்சியின் இயக்குனர் மரினா கிரானோஸ்கோவா வெற்றிக்கரமாக பேச்சுகளை நடத்தி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட சில நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஹசார்ட் அடுத்த சில வாரங்களில் ரியல் மாட்ரிட்டில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டில், செல்சி அணியில் இணைந்த ஹசார்ட் 352 ஆட்டங்களில் 110 கோல்களைப் போட்டிருக்கிறார். 13 கோடி டாலரில் ரியல் மாட்ரிட்டில் இணையும் பட்சத்தில் உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட இரண்டாவது ஆட்டக்காரராக ஹசார்ட் விளங்குவார்.  முன்னதாக லிவர்புல் கிளப்பில் இருந்து பிலிப்பே கோத்தின்ஹோ, 14 கோடியே 50 லட்சம் ஈரோ டாலரில் பார்சிலோனாவுக்கு விற்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன