புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஹாலந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து !
விளையாட்டு

ஹாலந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து !

குய்மேரேஸ், ஜூன்.7-

1966 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்றப் பின்னர் இதுநாள் வரை அனைத்துலக கால்பந்துப் போட்டிகளில் ஏதாவது ஒரு கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற இங்கிலாந்து அணியின் கனவு நிறைவேறவில்லை., ஆக கடைசியாக, ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திலும் இங்கிலாந்து தோல்வி கண்டுள்ளது.

போர்ச்சுகலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 1-  3 என்ற கோல்களில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது. முதல் பாதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் மார்கோஸ் ராஷ்போர்ட் போட்ட கோலின் மூலம் இங்கிலாந்து முன்னணிக்குச் சென்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் மத்திஸ் டி லைட் போட்ட கோலின் வழி நெதர்லாந்து ஆட்டத்தை சமப்படுத்தியது. இங்கிலாந்து தாக்குதல் ஆட்டக்காரர் ஜெசி லிங்காட் அடித்த கோல், வி.ஏ.ஆர் எனப்படும் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒப்சைட் காரணமாக நடுவர் நிராகரித்தார்.

90 நிமிட ஆட்டம் 1 – 1 என்ற நிலையில் முடிந்ததை அடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் செய்த தவறுகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட நெதர்லாந்து இரண்டு கோல்களைப் போட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து, போர்ச்சுகலை சந்திக்கவிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன