வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மானியம் வேண்டுமா? வேதமூர்த்தியை கேளுங்கள்! – சேவியர் ஜெயக்குமார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மானியம் வேண்டுமா? வேதமூர்த்தியை கேளுங்கள்! – சேவியர் ஜெயக்குமார்

பெட்டாலிங் ஜெயா ஜூன் 8-

நாட்டில் உள்ள அரசு சாரா பொது இயக்கங்கள் மானியம் வேண்டும் என்றால் தம்மை கேட்கக்கூடாது வேதமூர்த்தி தான் கேட்க வேண்டும் என நீர், நிலம் இயற்கை வள சுற்றுச்சூழல் அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியிடம்தான் பிரதமர் பணத்தை வழங்கியிருக்கிறார். என்னிடம் அல்ல. அதனால் மானியத்தை எதிர்பார்க்கும் தரப்பினர்கள் தம்மை அணுகுவதில் எந்த பலனும் இல்லை என சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

தமிழ் அறவாரியம் நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய அவர் மேற்கண்டவாறு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்நாட்டில் அம்னோவும் பாஸும் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இந்தியர்கள் மீண்டும் மெட்ராசிற்கு திரும்பிவிட வேண்டும் என குறிப்பிட்டார். ஒரே இனத்தை பிரதிபலிக்கும் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது அது மற்ற இனத்தை வெகுவாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன