வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > உலகக்கிண்ண தகுதிச்சுற்று: மலேசியா அதிரடி
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

உலகக்கிண்ண தகுதிச்சுற்று: மலேசியா அதிரடி

கோலாலம்பூர் ஜூன் 9-

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசியா 7-1 என்ற கோல் கணக்கில் தீமோர் லெஸ்தே அணியை வென்றது.

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் முதல் கட்ட ஆட்டம் நடைபெற்றது . இந்த ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்து கடைசி நிமிடம்வரை மலேசியா குழுவினர் இந்த ஆட்டத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பயிற்சியாளர் டான் செங் தலைமையிலான தேசிய காற்பந்து குழுவினர் தங்களுக்கு கிடைத்த சரியான வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து  7 கோல்களை அடித்து அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்களின் பாராட்டை பெற்றனர் . தொடக்கத்தில் தீமோர் லெஸ்தே கடும் மிரட்டலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மலேசிய குழுவினர் தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்தி தீமோர் லெஸ்தே கோல்முனையை நோக்கி சுறுசுறுப்பான தாக்குதல்களை நடத்தினர். தீமோர் லெஸ்தே குழுவின் தற்காப்பு மிகவும் பலவீனமாக இருந்தததால் மலேசிய குழுவினர் அந்த அணியின் கோல் முனையை நோக்கி எளிதாக ஊடுருவ முடிந்ததது.

தகுதி சுற்று போட்டியில் மொத்தம் 12 குழுக்கள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு குழுவும் லீக் முறையில் இரண்டு கட்டங்களாக விளையாட வேண்டும். பிஃபாவின் ரேங்கிங் பட்டியலில் 168 வது இடத்யதிலுள்ள மலேசியக் குழுவினர் மீண்டும் புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கில் ஜூன் 11ஆம் தேதியன்று தீமோர் லெஸ்தே அணியுடன் மோதுவார்கள்.

அந்நாட்டில் நல்ல வசதியுடன் கூடிய மைதானம் இல்லை என்பதால் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் இரண்டாவது லீக் ஆட்டமும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் விளையாட வேண்டும் என முடிவு செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன