கோலாலம்பூர் ஜுன் 9-

வீட்டில் கரடி குட்டி வளர்த்து வந்த பாடகி கைது செய்யப்பட்டார். தேசா பன்டானிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கரடிக்குட்டியை அந்த பாடகி வளர்த்துள்ளார்.

அவரது வீட்டிற்கு சென்ற தீபகற்ப மலேசிய தேசிய பூங்கா வனவிலங்குத் துறை அதிகாரிகள் அந்த 27 வயதுடைய பாடகியை கைது செய்தனர்.

பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டதை .வனவிலங்கு பூங்கா துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் காடிர் அபு உறுதிப்படுத்தினார். இந்த கரடி குட்டி தொடர்பான எந்த ஒரு ஆவணத்தையும் அந்த பாடகி கொண்டிருக்கவில்லை.

அந்த பாடகிக்கு சொந்தமான ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் ஜன்னல் பகுதியில் இந்த கரடி குட்டி யை கண்டு சுற்றுவட்டார குடியிருப்புவாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அந்த வீட்டின் ஜன்னலில் கரடிக் குட்டி காணப்படும் 5 வினாடிகளைக் கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டது.

Sun Bear. எனப்படும் இந்த அபூர்வ ரக கரடிக் குட்டியை வளர்ப்பதற்கு அந்தப் பெண் வனவிலங்கு பூங்காவில் அனுமதி எதனையும் கொண்டிருக்கவில்லை என அப்துல் காடிர் கூறினார்.