முகப்பு > சமூகம் > ஆசிரம பிள்ளைகளுக்கு கலைத் தொழில் திறன் பயிற்சி! ஸ்ரீ சாரதாதேவி இல்லத்தின் புதிய முயற்சி
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆசிரம பிள்ளைகளுக்கு கலைத் தொழில் திறன் பயிற்சி! ஸ்ரீ சாரதாதேவி இல்லத்தின் புதிய முயற்சி

ரவாங், ஜூன் 9-

மலேசியாவில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ரவாங் ஸ்ரீ சாரதாதேவி இல்லம் தொடர்ந்து அங்கு இருக்கும் மாணவர்களின் நலத்திட்டங்களுக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் எஸ்பிஎம் தேர்வை முடிக்கும் தருணத்தில் மாணவர்கள் கையில் கலை தொழில் திறன் பயிற்சிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்குவதற்கான புதிய நடவடிக்கையை அந்த இல்லம் முன்னெடுப்பதாக அதன் தலைவர் டாக்டர் குமரன் தெரிவித்தார்.

1996 முதல் இங்கு செயல்பட்டு வரும் பெண் பிள்ளைகளுக்கான இந்த ஸ்ரீ சாரதாதேவி ஆசிரமத்தில் 3 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 25 பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர்களில் பலர் படிவம் 1 முதல் 5 வரை கல்வி பயின்று வருகிறார்கள். இங்குள்ள மாணவர்கள் அனைவரும் பல்வேறான சூழ்நிலையின் காரணமாக இங்கு வந்துள்ளனர். அதன் காரணமாக பலருக்கு கல்வியில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்வது மிகப் பெரிய சிரமமாக இருக்கின்றது.

ஆனால் இவர்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து அவர்களுக்கான கலை தொழில் திறன் பயிற்சி ஸ்ரீசாரதாதேவி இல்லம் வழங்கி வருவதாகவும் டாக்டர் குமரன் கூறினார். இந்த திட்டத்தில் பதிந்து கொண்ட மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை முடிப்பதற்கு முன் அவர்கள் கையில் டிப்ளோமா சான்றிதழ் இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விட் கல்லூரியின் ஒத்துழைப்பில் சமையல் கலை தொழில் திறன் பயிற்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி ஒருவருக்கு தலா 25 ஆயிரம் வெள்ளி செலவில் 25 மாணவர்களுக்கு மலேசிய விட் அகாடமி கல்லூரி உபகாரச் சம்பளம் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் கேக் செய்வது இனிப்பு பண்டங்கள் தயாரிப்பது இதர சமையல் தொடர்பான பல கலைகளைக் கற்றுக் கொள்கின்றார்கள். அதோடு தற்போது பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் அதிநவீன தோடு சங்கிலி கை சங்கிலி அணிகலன்களையும் தயாரித்து இவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

இதில் பயனடைந்த 5 மாணவர்கள் இத்திட்டம் குறித்த தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். இது தங்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு சிறந்த அடித்தளம் என அவர்கள் புகழாரம் சூட்டினார். இந்த திட்டத்தின் வழி பயனடைந்த கங்கா (வயது 18), கீர்த்தனா ( வயது 18), சங்கீதா ( வயது 19), கனகா ( வயது 18), தான்யா (வயது 17) ஆகியோர் ஸ்ரீ சாரதாதேவியின் அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

2012 தொடங்கி இந்த ஸ்ரீ சாரதாதேவி இல்லத்தை டாக்டர் குமரன் வழிநடத்தி வருகின்றார். இவருக்கு துணைத் தலைவர் திருமதி தேவி, திலகா உள்ளிட்ட பலரும் துணை நின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது டாக்டர் குமரன் தலைமையில் இங்கு உள்ள மாணவர்கள் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்து வருகின்றார்கள். தொழில்திறன் பயிற்சி மட்டுமின்றி அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் கலைத்திறனையும் வெளிக்கொண்டு பெறுவதற்காக பாடல் திறன் போட்டியையும் நடத்தப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன