தகுதி இல்லாத ஒருவருக்கு தமிழ்ப்பிரிவின் தலைமைப் பொறுப்பா??

புத்ராஜெயா, ஜூன் 9-

இந்நாட்டில் தமிழ் மொழியை சிறப்புற கற்று‌ முழுமையான தகுதியைப் பெற்று இருந்தும், போதுமான தகுதிகள் இல்லாத அல்லது குறுக்கு வழியில் தமிழ் மொழி சார்ந்த உயிரிய பொறுப்புகளுக்குச் சிலர் நியமிக்கப்படுவது என்பது நம் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும்.

இந்த நிலை என்பது கடந்த கால ஆட்சியிலும் சரி புதிய மலேசியாவிலும் சரி தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு முறையான தகுதியில்லாத நிலையில் தமிழ் மொழி சார்ந்த உயரிய பொறுப்புகளுக்குத் தங்களை முன்மொழிந்து அப்பொறுப்பினை அபகரிக்கும் படலம் தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது.

அந்த வகையில் மலேசியக் கல்வி அமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழி பகுதியின் தலைவராக அமர்ந்திருக்கும் திரு ராமநாதன் நாகரத்தினம் என்பவர் அப்பொறுப்பை வகிக்க முற்றிலும் தகுதியற்றவர் என தமிழ் ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கலைத்திட்ட பிரிவு என்பது பள்ளிக்கூடங்களுக்கான பாடத் திட்டத்தை தயாரித்து அதனை சரிவர ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு பணியினை மேற்கொண்டு வருகிறது. அதில் தமிழ் மொழிப் பிரிவு தலைவராக இருக்கும் திரு ராமநாதன் நாகரத்தினம் என்பவர் தமிழ்மொழியில் நிபுணத்துவம் இல்லாத ஒருவராகவே கருதப்படுகிறார்.

இது குறித்து ஆய்வு செய்த பொழுது திரு ராமநாதன் அவர்கள் தனது இளங்கலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப் படிப்பையும் தமிழ்மொழி அல்லாத துறைகளில் பெற்றிருக்கின்றார். அவரை அமர்ந்திருக்கும் பொறுப்பானது தமிழ் மொழியை ஆரம்பம் இடைநிலை, இளங்கலை மற்றும் முதுகலை இவை அனைத்திலும் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் அமர்ந்து இருக்க வேண்டிய பதவி.

அப்பதவியானது எப்படி தமிழ் மொழியில் நிபுணத்துவம் இல்லாத ஒருவருக்கு கிடைத்தது என்பது இங்கே கேள்விக்குறியாகிறது. நிபுணத்துவமும் திறமையும் தகுதியும் கொண்ட ஒருவர் இருக்க வேண்டிய ஒரு பகுதியில் இது போன்ற தகுதிகள் ஆற்ற ஒருவர் அமர்ந்து இருப்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழி தொடர்பான கலைத்திட்ட உருவாக்கத்திற்கும் பெருத்த பின்னடைவை கொண்டுவரும் என்று தமிழ் ஆர்வலர்கள் பரவலாக கூறுவதாக அநேகனுக்கு செய்தி கிடைத்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு முறையான புகாரும் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து கல்வி அமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் தங்களது முறையீடுகளை கூறி வருகின்றனர்.

1 COMMENT

  1. முற்றிலும் வரவேற்கக்கூடிய கருத்து. இந்த நிலை தேசியத்தில் மட்டுமல்லாது மாநில அளவிலும் தொடர்கிறது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இது உச்சம். பள்ளியில் சரிவர பணியாற்றாத, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓர் ஆண்டு ஊதியமற்ற விடுப்பில் இருந்த ஒருவர் இப்போது மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர். தகுதியற்ற தன் நட்புகள் மற்றும் உறவுகளுக்கு விரைவு வழியில் பதவி உயர்வு தந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடித்துக் கொண்டிருகிறான். கண்டும் காணாத அரசியல்வாதிகள், பொதுமக்கள்.

Comments are closed.