புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > உள்ளூர் வர்த்தகர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?-ரத்தினவள்ளி அம்மையார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

உள்ளூர் வர்த்தகர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?-ரத்தினவள்ளி அம்மையார்

கோலாலம்பூர், ஜூன் 9-

அந்நிய தொழிலாளர்களை மலேசியாவிற்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்து வருமானம் ஈட்டும் நபர்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மாமணி ரத்தின வள்ளி அம்மையார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கார்னிவல் நடத்துகிறோம் என்ற போர்வையில் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒரே இடத்தில் அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்து வெளிநாட்டு வியாபாரிகளை இங்கு கொண்டுவந்து வருமானம் ஈட்டுவது உள்ளூர் வர்த்தகர்களை வெகுவாக பாதிக்கின்றது.

இதுகுறித்து அவர்கள் பலமுறை அரசாங்கத்திடம் முறையிட்டபோது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால் உள்ளூர் வர்த்தகர்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

வியாபாரத் துறையில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் இந்திய வர்த்தகர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்காக பல முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள். ஆனால் நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் அந்நிய தொழிலாளர்களை இறக்குமதி செய்து லாபம் ஈட்டும் நடவடிக்கையை தொடர்ந்து வருகிறார்கள்.

இதனை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கார்னிவல் நடத்தும் நபர்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கு குறிப்பாக இங்கு பிரபலமானவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன