ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு புதிய தலைமுறை இயக்கத்தினர் நடத்திய கடற்கரை தூய்மைப் பணி!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு புதிய தலைமுறை இயக்கத்தினர் நடத்திய கடற்கரை தூய்மைப் பணி!

பினாங்கு, ஜூன் 9-

பினாங்கு மாநகராண்மைக் கழகத்தினருடன் இணைந்து இங்கு செயல்பட்டு வரும் புதிய தலைமுறை இயக்கத்தினர் இங்கிருக்கும் பத்து பிரிங்கி கடற்கரையில் நடத்திய தூய்மைப் பணியால் அப்பகுதி புதுப் பொலிவான தோற்றத்தால் மாற்றம் கண்டது.

மாநகர் மன்ற உறுப்பினர் ஆர்.காளியப்பனின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வினை, புக்கிட் பெண்டேரா மக்களவை உறுப்பினர் வோங் ஹொன் வாய் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த வேளையில்,புதிய தலைமுறை இயக்கத்தின் பிரதிநிதிகளாக ஏறத்தாழ 40 இளையோர்கள் இதில் பங்கேற்றனர்.

பினாங்கு மாநில அரசின் பசுமை, தூய்மை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிலை என்ற கருப் பொருளை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தூய்மைத் திட்டம் இங்கு மேற்கொள்ளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய தலைமுறை இயக்கப் பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு இந்த கடற்கரையின் சுற்றுப்புறங்களில் காணப்பட்ட குப்பைகளை முற்றாக அகற்றி தூய்மையை நிலை நாட்டியதால் இப்பகுதி பார்வைக்கு அழகியத் தோற்றமாய் மெருகேற்றம் கண்டது.

பினாங்கு மாநிலத்தின் சிறந்தொரு சுற்றுலாத் தளமாக பிரசித்திப் பெற்றிருக்கும் இந்தக் கடற்கரையின் தூய்மையை நிலை நிறுத்துவதற்கு அர்ப்பண உணர்வுடன் பங்காற்றி, சிறந்த வகையில் ஒத்துழைப்பு வழங்கிய, புதிய தலைமுறை இயக்கத்தினருக்கு இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் காளியப்பன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இத்தகைய பாணியில் மாநிலத்தின் இதர சுற்றுலாப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் நடத்தப்பட்டால், பினாங்கு  தூய்மையின் சிகரமாக விளங்குவது திண்ணமென்றும், இதற்கு இங்கு தன்னார்வ அடிப்படையில் செயல்பட்டு வரும் மற்ற பொது அமைப்புகளும் முன்வர வேண்டுமென்று காளியப்பன் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தின் தூய்மையை நிலை நிறுத்துவதில் இளையோர்களின் பங்களிப்பும் அர்ப்பண உணர்வும் மிகவும் அவசியமென்று வேண்டுகோள்  விடுத்த காளியப்பன்,இத்தகைய பரந்த மனப்பான்மையுடன் களமிறங்க முன் வருகின்ற இளையோர்களுக்கு மாநில மாநகராண்மைக் கழகத்தின் சார்பில் நல்லாதரவு வழங்கப்படுமென்றும் உறுதிபட தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன