கோலாலம்பூர் ஜூன் 10-

தேசிய அம்பு எய்யும் வீரரான சுரேஷ் செல்வதம்பி பாரா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியில் தங்கப் வென்று என்று மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் தோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.

உலக அம்பு எய்யும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மலேசியர் என்ற சாதனையையும் கெடாவை சேர்ந்த சுரேஷ் படைத்திருக்கிறார். 23 வயதுடைய சுரேஷ் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஈரிக் பெனட்டை 7 -3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் அவர் ஏற்கனவே காலிறுதிச் சுற்றில் நடப்பு உலக சாம்பியன் ஷாவ் லீகியூ .மற்றும் அரைஇறுதி சுற்றில் ரஷ்யாவின் பாத்தோ டென்டோர்ஷீப் ஆகியோரை விழுத்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். அந்த வகையில் இப்போட்டிகள் தங்கம் வென்றதன் மூலம் சுரேஷ் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தகுதி பெற்றிருக்கிறார்.

ஆகக் கடைசியாக 2011 ஆம் ஆண்டில் உலக சம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவின் காலம் வென்ற சலாம் சிடேக் வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் சுரேஷ் தனது முழு திறனையும் பயன்படுத்தியதால் அவர் தங்கப்பதக்கம் பெறுவதற்கு முழு தகுதியை பெற்றதாக தேசிய அம்பு எய்தல் பயிற்சியாளரான மார்சுகி ஜக்கரியா தெரிவித்தார்.

அவரது இந்த வெற்றிக்காக நான் பெருமைப்படுகிறேன். அவரது முயற்சி அபரிமிதமாக இருந்தது 120 விழுக்காடு மேலாக அவர் கடுமையாக பாடுபட்டு இந்த வெற்றியை மலேசியர்களுக்கு தேடித் தந்திருக்கிறார். இதற்காக இறைவனுக்கும் தாம் நன்றி கூற கடமைப் பட்டிருப்பதாக ஜக்கரியா கூறினார். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக ரேங்கிங் போட்டியில் ஆண்கள் பிரிவில் சுரேஷ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.