வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 10ஆவது அனைத்துலக பாரம்பரிய நடன விழா!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

10ஆவது அனைத்துலக பாரம்பரிய நடன விழா!

கர்நாடக பாரம்பரிய நடன மையமும் மலேசிய ஸ்ரீ இராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவன இயக்கமும் இணைந்து 10-வது அனைத்துலக பாரம்பரிய நடன விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். இவ்விழா வருகின்ற 15/06/2019, மாலை மணி 4.30க்கு எண் 2 ஜாலான் டத்தோ யூசோப் ஷாபுடின் 15, தாமான் செந்தோசா கிள்ளான் என்ற முகவரியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 8 விதமான பாரம்பரிய நடனங்களை ஒரே மேடையில் ஆவனப்படுத்தும் முயற்சியில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், இவ்விழாவில் பங்கேற்கவிருக்கும் இந்திய பாரம்பாரிய நடனக் கலைஞர்கள் அனைவரையும் பாரம்பரிய நடனத்திற்கு பெயர்பெற்ற மலேசியா நாட்டிற்கு அழைப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்தியாவில் பல்வேறு இடங்களிலிருந்து திறமையான நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் பங்கு கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் மலேசிய நாட்டிற்கு வரவேற்பதோடு, கலந்து கொள்ளும் நடனக் கலைஞர்கள் அனைவருக்கும் ஸ்ரீ இராகவேந்திர சுவாமிஜியின் ஆசி கிடைக்கப்பெறுவதிலும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இவ்விழாவில் கலந்து கொள்ளும் நடனக் கலைஞர்கள் அனைவரும் 10 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்தியாவில் பல்வேறு இடங்களிலிருந்து ஏறக்குறைய 20 திறமை வாய்ந்த நடனக் கலைஞர்கள் இவ்விழாவுக்கு வருகையளிக்க தயார்நிலையில் உள்ளனர்.

உலக கின்னஸ் சாதனையாளரும், சுமார் 1091 முறை தனது பரதப்படைப்பை நிகழ்த்திய Dr சுவாதி P.பரத்வாஜ் அவர்களின் தலைமை ஏற்பாட்டில் இவ்விழா நடைபெறவிருக்கின்றது. பரதநாட்டிய ஆசிரியருமான இவர் கர்நாடாகாவில் ஏறக்குறை 500 வசதி குறைந்த குழந்தைகளுக்கு இலவச சேவையை வழங்கி வருபவர் என்பதும் குறிப்படத்தக்கது.

பாரம்பரிய நடனக் கலைஞர்களை ஒரே மேடையில் ஒன்று திரட்டி அவர்களின் திறன்களை ஆதரிக்கும் மனிதநேய நோக்கில் இம்முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், ஸ்ரீ இராகவேந்திரா சுவாமி அவர்களின் திருப்பாத ஆசியோடு பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களது நடனக் கலையில் முன்னோக்கிச் செல்ல ஸ்ரீ இராகவேந்திரா சுவாமி அருள்புரிவாராக.

இம்மாபெறும் விழா வெற்றிக்கரமாக நடைபெற கலை ஆர்வலர்கள், பொது மக்கள், அனைத்து நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவ்விழாவில் கலந்து தங்களது முழு ஆதரவை வழங்கும்படி இதன்வழி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன