திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அமைச்சரைப் போல உருவம் கொண்ட ஆடவரின் காணொளி; பரப்பானது சமூக ஊடகங்கள் !
முதன்மைச் செய்திகள்

அமைச்சரைப் போல உருவம் கொண்ட ஆடவரின் காணொளி; பரப்பானது சமூக ஊடகங்கள் !

கோலாலம்பூர், ஜூன்.11 –

அமைச்சரைப் போல உருவம் கொண்ட ஆடவர் ஒருவர் மற்றொரு ஆடவருடன் நெருக்கமாக இருக்கும்  காணொளிகளால், இன்று காலைத் தொடங்கி சமூக ஊடங்களில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அந்த அமைச்சர் முக்கிய அரசியல் கட்சியின் துணைத் தலைவர் என்பதும் குறிப்பிடதக்கது.

அதிகாலையில் புலனம் ஒன்றில் நாட்டில் இருக்கும் நிருபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அமைச்சரின் நோன்பு பெருநாளுக்கான திறந்த இல்ல உபசரிப்பு என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த புலனத்தில் திடீரென்று அமைச்சரின் சாயல் கொண்ட ஆடவர் ஒருவர் மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகளும் புகைப் படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதேவேளையில்  கடந்த 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் , மே பேங்க் மற்றும் டச்சு வங்கிகளில் நடந்த பண பரிவர்த்தனைத் தொடர்பான ஆவணங்களும் அந்த புலனத்தில் பகிரப்பட்டுள்ளன.  இதனால் உள்ளூர் நிருபர்கள் பரப்பரப்பு அடைந்த வேளையில், பெரும்பாலான நிருபர்கள் அந்த புலனத்தில் இருந்து வெளியேறினார்.

புதிய மலேசியா பிறந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் வேளையில் மீண்டும் பழையக் குருடி கதவைத் திறடி என்ற போக்கில் மற்றொரு ஆபாச காணொளியுடன் நாட்டின் அரசியலில் அடுத்த விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன