கோலாலம்பூர், ஜூன்.11 – 

‘Persatuan Masyarakat Pelita Hidup Malaysia’ அமைப்பின் ஏற்பாட்டில் வரும் ஜூன் 29-ஆம் தேதி, இந்திய மகளிருக்கான ‘நெட்வொர்க்கிங்’ ஒன்றுகூடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை MCNCC  No 15, Jalan 18/16, 46000 Peatling Jaya, Selangor என்ற முகவரியில் நடைபெறவிருக்கிறது.

இதன் முக்கிய நோக்கம் பல்வேறு தொழில்துறையில் ஈடுபட்டு வரும் நம் இந்திய மகளிரை ஒருங்கிணைத்து, அவர்கள் சம்பந்தப்பட்ட தொழில்துறையை மேம்படச் செய்வதற்காகப் பலவித நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும்.
புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள், அதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதில் சிரமம் மேற்கொண்டால், அதை எப்படி திறம்பட நகர்த்திச் செல்வது, அதற்கான வழிவகைகள் என்ன என்பதையெல்லாம் முறைப்படி ஏற்படுத்திக் கொடுக்கவே இந்த ‘நெட்வொர்க்கிங்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறையைப் பொருத்தவரை நெட்வொர்க்கிங் என்பதுமிக மிக அவசியம். நம் மகளிர் தொழில் முனைவர்கள் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விவரங்கள், அதற்கான விளம்பரங்கள் என எதைப்பற்றியும் இந்த நெட்வொர்க்கில் தெரிவித்தால், உடனே அவர்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் இந்த ஒருங்கிணைப்பின் மூலம் வழங்கப்படும்.

இல்லத்தரசிகள் பலருக்கு நிறைய திறமை இருக்கும். ஆனால் அதை வெளிக்காட்ட சரியான தளம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களின் திறனை வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்கிறோம் என்கிறார், ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் டாக்டர் உமா ராமசாமி.

மேலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதற்காகவே இதுபோன்ற நிதி திரட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து 10 வருடங்களாக இயங்கி வரும் இவர்களின் ஆறாவது நிகழ்ச்சி, இந்த மகளிர் நெட்வொர்க்கிங் நிகழ்ச்சி.
சுமார் 250 பேர் கலந்துகொள்ளும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மகளிர் ஒருங்கிணைப்பு நிகழ்வில், நமது சமுதாயத்தின் தொழில் முனைவர்கள், இல்லத்தரசிகள், புதிய தொழிலில் சாதிக்க விரும்புகிறவர்கள் கலந்துகொள்ளலாம்!
தொடர்புக்கு: 012 – 8750199 (டாக்டர் உமா ராமசாமி)