திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > காணொளியில் இருப்பது நான் – முஹமட் அசிக்கின் பரபரப்பு வாக்குமூலம் !
முதன்மைச் செய்திகள்

காணொளியில் இருப்பது நான் – முஹமட் அசிக்கின் பரபரப்பு வாக்குமூலம் !

கோலாலம்பூர், ஜூன்.12 – 

செவ்வாய்கிழமை காலைத் தொடங்கி நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்ட காணொளி ஒன்றில் அமைச்சரைப் போல் தோற்றம் கொண்ட ஒருவர் மற்றொரு ஆடவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் அந்த காணொளியில் இருப்பது தாம்தான் என முஹமட் அசிக் அசிஸ் என்ற இளைஞர் இன்று காலை முகநூலில் வாக்குமூலம் வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த இளைஞர், மூலத் தொழில் அமைச்சின் துணையமைச்சரான பிகேஆர் கட்சியின் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் செயலாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.

இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், அந்த காணொளியில் இருக்கும் அமைச்சரைப் போல் தோற்றம் கொண்டவர் யார் என்ற விவரங்களையும் முஹமட் அசிக் பகிரங்கப்படுத்தியுள்ளார். சண்டகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின்போது அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மே 11-ஆம் தேதி அந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தனக்குத் தெரியாமல் அந்தக் காணொளி எடுக்கப்பட்டிருப்பதாகவும் முகமட் ஹசிக் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு ஆணையம் இந்த விவகாரத்தையும் அந்த அமைச்சரையும் விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கும் முகமட் ஹசிக், சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர் தலைவராகத் தொடர்வதற்கு தகுதியில்லாதவர் என்றும் தனது காணொளியில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது நாட்டின் அரசியலில் மிகப் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன